என் மலர்
அரியலூர்
- அரியலூரில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்
- 188 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
அரியலூர்,
அரியலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் நகர போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது கோவிந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 188 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- அரியலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்கள் பெறப்பட்டன
- போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு புதி தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார்
- கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம். கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். . அவரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், பொய்யாமொழி, பாக்யராஜ், ஆனந்த், உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர். இங்கு பணியாற்றிய தாசில்தார் துரை அரியலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- ஜெயங்கொண்டம் அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வருகின்றனர்.
இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொது மக்கள் அரியலூர் - தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அரியலூர் - தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.
ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இந்த சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வேட்டைக்கு சென்றவர்களை திருடர்கள் என நினைத்து கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்
- கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததால் 3 நரிக்குறவ இளைஞர்கள் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலையில் உள்ள மகிமைபுரம் பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிவா (வயது 20), ராமன் (37), புகழேந்தி (25) ஆகிய இளைஞர்கள் துப்பாக்கியுடன் இரவு அந்தப் பகுதியில் வவ்வால் வேட்டைக்கு சென்றனர்.
பூவாயி குளம் கிராமப் பகுதியில் அவர்கள் வேட்டையாட சென்ற போது அந்தப் பகுதி கிராம மக்கள் திருட வந்தவர்கள் என நினைத்து 3 பேரையும் பிடித்து கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவரது மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நள்ளிரவு ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் காயமடைந்தவர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- வீடுகள்,தொழிற்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது
அரியலூர்,
விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நவராத்திரி பண்டிகை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 9 வது நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள்,தொழில்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்தனர். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியை பரப்பி அதில் குழந்தைகளை எழுதச்செய்து கல்வியை தொடங்கினர்.
கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில், அரியலூர் அலந்துறையார், கோதண்டராமசாமி, சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலுள்ள வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் வைபவம் நடைபெற்றது
- வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்
அரியலூர்,
அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலில், அம்பு தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமீன்தார் துரை மழவராயர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மழவராயர் வம்சவழியினர் சேரர்மன்னர்கள் மற்றும் மழவராயர்களின் சின்னமான விற்கொடி ஏற்றினார். பின்னர் அவர்கள் வில் அம்புக்கு பூஜை செய்து, அதை வன்னி மரத்தின் மீதும், வாழை மரத்தின் மீதும் தொடுத்தனர். பின்னர் அவர்கள், அந்த வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்
- நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்திரன் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இறந்து போன சந்திரனுக்கு சசிகலா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது
- கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது
அரியலூர், அக்.24-
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டி ய முன்னெச்சரிக்கை பணி கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தாவது:-
சிமெண்ட ஆலைகளில் பழுதான மற்றும் பலவீனமான நிலையில் உள்ள தொழிற்சா லைக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் இருப்பின், அக்கட்டிடங்க ளைசரி செய்யும் வரை கண்டிப்பாக பயன்படுத்தாமல் இருக்கவும்.தொழிற்சாலைகள் இல்லா மல் பிற இடங்களில் பேரிடர் ஏற்படும் நிகழ்வுகளில் தேவை யான மீட்பு உபகரணங்களான எரிபொருளுடன் ஜெ.சி.பி, மரம் வெட்டும் கருவி, ஜெனரேட்டர் உடனடியாக வழங்கி மீட்புப் பணிகள் மேற்கொள்ள உதவிடவும்.
தொழிற்சாலைகள் இல்லாமல் பிற இடங்களில் பேரிடர் ஏற்படும் நிகழ்வு களின் போது பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான பொருளுதவி மற்றும் அத்தி யாவசிய வசதிகள் செய்து தந்திடவும், பேரிடர் காலங்க ளில் பயன்படுத்துவதற் குண்டான மீட்பு உபகர ணங்களின் பட்டியலை, மாதந்தோறும் பேரிடர் மேலாண்மை பிரிவில் அளித்திடவும் தெரிவிக்க ப்பட்டது.வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் இயங்கிவருகிறது.இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும். வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல் மற்றும் புகார் தெரிவித்திட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர் .ராமகிருஷ்ணன், வட்டாட்சி யர் (பேரிடர் மேலா ண்மை) சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளி ட்ட பலர் கலந்துக்கொண்ட னர்.
- ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
- பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக காவல்துறைக்கு வந்த தகவல் வந்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் நடேசன் இளங்கோவன் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் மது அருந்திவிட்டும், உறிய ஆவணம் இல்லாமலும் வந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






