என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் வீட்டு கடனுக்காக தனியார் வங்கி முறைகேடாக வசூல் செய்த ரூ.1.35 லட்சத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரின் மனைவி லலிதா(வயது 46). கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் தனியார் வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார்.

    அந்த வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையிலிருந்து லலிதாவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி இன்சூரன்ஸ் செய்து கொடுத்திருந்தனர். கடன் தவணையை முறையாக செலுத்தி வந்த லலிதா கடந்த 2022ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிகளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீதமுள்ள தவணைகளை காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்தவில்லை.

    ஆனால் தனியார் வங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணைத் தொகையை செலுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் தனியார் வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பெற்ற 11 தவணைத் தொகைகள் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 850-ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அதிரடி

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

    அரியலூர் மாவட்டம் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டர் நிலம் எடுக்கும்பிரிவு நேர்முக உதவியாளர் ஆனந்தவேல் அரியலூர்வருவாய் வட்டாட்சியராகவும், உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் துரை அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும் அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் முத்துலெட்சுமி அரியலூண மாவட்ட கலெக்டர் நேர்முகஉத வியாளர்(நிலஎடுக்கும் பிரிவு) வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டு உளளனர்.

    இதே போல ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வருவாய் வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் கலிலுர்ரகுமான் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சி யராவும் மாவட்ட கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளர் செல்வம் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலராகவும் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால் ஆண்டிமடம் தேர்தல்பிரிவு துணைவட்டா ட்சியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் அய்யப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சி யராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் பழனிவேல் அரியலூர்வட்டவழங்கல் அலுவலராகவும், செந்துறை வட்டவழங்கல் அலுவலர் பாஸ்கர் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், அரியலூர்கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இளவரசு செந்துறை வட்டவழங்கல் அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அரியலூரில்201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபைக் கூட்டத்தில் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும். இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.

    அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தை மணிகண்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதர சமூக வலைதளங்களிலும் அதை வெளியிட்டார்.

    இதை உயர் அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது மணிகண்டன், அவரது மனைவி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவமனை ஆபரேசன் அறையில் பணியில் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும், இது இணையத்தில் எப்படி வைரலானது என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். மணிகண்டன் போட்டோ எடுத்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரது மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் வெள்ளக்கால மீட்பு பணிக்காக மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வழங்கப்பட்டு உள்ளது
    • தீயணைப்பு துறையினர், கலெக்டரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பருவமழை கால மீட்பு பணிகளுக்காக  கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா,  நிதியிலிருந்து ரூ.4.65 லட்சம் மதிப்பிலான மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வாங்கப்பட்டுள்ளது. இந்த படகை மாவட்ட தீயணைப்புத் துறை   அலுவலர் அம்பிகாவிடம், கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் வாக்காளர் பட்டியலில் 5.07 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்
    • பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    அரியலூர்,

    அரியலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணை ந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,07,425 ஆகும்.

    மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சொர்ணா இது குறித்து கூறும்போது:-

    18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்க ப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்கு ச்சாவடி மையங்க ளில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    அரியலூர், 

    அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி , அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. மேலும் பேரணியில் கலந்து கொண்ட சுமார் 100 மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டு சென்றனர். 

    • அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூரில் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-இம்மாதம் இது நாள் வரை 429.24 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2361 மெ.டன் யூரியா, 1082 மெ.டன் டி.ஏ.பி 615 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1874 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. 184 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 320 மெ.டன் என மொத்தம் 504 மெ.டன் விதை நெல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 14.8 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. சம்பா நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் வழிபறி நடந்துள்ளது
    • 2 மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    அரியலூர்,

    அரியலூர், குறுமஞ்சாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் தென்றல் என்பவரின் மனைவி அம்பிகா(55).இவர் அரியலூர் சுப்பிரமணியர் கோயில் அருகேயுள்ள ஒரு வங்கியில் இருந்து தனது சேமிப்பு பணம் ரூ.25 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அவரது கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகத்தில் சென்றுவிட்டனர். அந்த கைப்பையில் ரூ.25 ஆயிரம், வங்கி சேமிப்புகணக்கு புக், கைப்பேசி உள்ளிட்டவைகள் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

    அரியலூர்

    அரியலூர் தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி அரியலூரில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் சிறப்பு ஓய்வூதிய தொகையாக ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர்.

    • கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.
    • அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    அரியலூர், அக்.27-

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். மனைவி லலிதா (46).

    கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் ஒரு வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை கொடுத்துள் ளார்.

    வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையி லிருந்து லலிதாவுக்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி காப்பீடு செய்து கொடுத்திருந்தனர்.

    கடன் தவணையை முறை யாக செலுத்தி வந்த லலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிக ளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.

    ஆனால் அந்த இன்சூ ரன்ஸ் நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்த வில்லை.

    ஆனால் வாங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு கேட்டு தொடர்ந்து கட்டாயப் படுத்தியதால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணை தொகையை செலுத்தி விட்டனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ் செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

    சட்டவிரோதமாக பெற்ற 11 மாத தவணை தொகை ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    • தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
    • விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி அலகுகள் மற்றும் பட்டாசு விற்ப னைக்கடைகள் வெடிபொ ருள் சட்டத்தின்படி தீய ணைப்புதுறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகா ப்புத்துறை யின் தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.

    உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இடத்தில் மட்டும் உரிம அளவின்படி உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பு வைத்து க்கொள்ள வேண்டும். அனைத்து பாது காப்புகள் குறித்த நட வடிக்கைகளை தவறா மல் கடைபிடிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    உரிமம் பெறாத இடங்க ளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள்.

    அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத இடங்களில் மொத்தமாக பட்டாசுகள் பதுக்கிவைத்துல் இருப்பு வைத்தல் போன்றவைகள் தெரியவந்தால் பொது மக்கள் 9865437801 என்ற எண்ணில் தகவல் அளிக்க லாம்.

    பொதுமக்கள் பட்டாசு பண்டில்கள், பட்டாசு கிப்டு பாக்ஸ்களை பேருந்துகள் மற்றும் ரெயில் பயணங்க ளின் போது உடன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×