என் மலர்
அரியலூர்
அரியலூர்,
அரியலூரில் 8.கி.மீ தூரம் நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடங்கும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார திட்டத்தின் படி 8.கி.மீ தூரம் உள்ள நடைபயிற்சி பாதை கண்டறியப்பட்டு விரைவில் தொடங்க உள்ளது. அரியலூர் நகரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக பல்லேரி அரசு மருத்துவமனை சாலை வழியாக பென்னி ஹவுஸ் தெருவில் இருந்து பெரம்பலூர் சாலை, சத்திரம்,
நகராட்சி நூலகம், தேரடி வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி செட்டி ஏரி வழியாக ஜெயங்கொண்டம் சாலையில் அரசு பல்துறை அலுவலக கட்டிடம் வரை 4 கிலோ மீட்டர் தூரமும் அங்கிருந்து திரும்பி மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைந்து 8 கிலோமீட்டர் தூரம் நடை பயணத்தை நிறைவு செய்யுமாறு திட்டமிடப்பட்டுள்ளது
நடை பயிற்சி பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு இடம் மற்றும் இடையிடையே மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து உடல்நலம் பரிசோதனை மேற்கொள்வார்கள். இப்பயண வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் இளைப்பாறும் இடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி உடல்நலம் காக்குமாறும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இத்தடத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
அரியலூர்,
அரியலூர் அரசு கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதி மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்க்கை வழிகாட்டு முறை குறித்து பேசினர்.
கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உயர்கல்வி ஆலோசகர் பாஸ்கரன், தேசிய தொழில் சேவை மையத்தின் இளம் தொழிமுறையாளர் எபிநேசர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர தி.மு.க. சார்பில் ஜெயங்கொண்டத்தில், வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமை தாங்கினார். கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான சபாபதிமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து ெகாண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி சிற ப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.ராமகிருஷ்ணன்,
துணை அமைப்பாளர்கள் பஞ்சநாதன், கார்த்திக், பழ.புனிதம், சுபா. ச.வசந்தபகலவன், வட்ட கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி பணிகுழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர்
இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி-காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், நகரத் தலைவர் மா.மு.சிவக்குமார், மகளிரணித் தலைவி மாரியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புகழ், வட்டாரத் தலைவர்கள் அரியலூர் கண்ணன், திருமானூர் கங்காதுரை, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- அரியலூர் நகர தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
- நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன் வரவேற்றார்.
அரியலூர்,
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகர தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன் வரவேற்றார்.
கூட்டத்தில் அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதி மேலிட பொறுப்பாளர் கவிஞர் சல்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒன்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்றி, கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் லதாபாலு, நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆ.குணா, நகர் மன்ற உறுப்பினர்கள் அன்பு, ராஜேஸ் , புகழேந்தி , சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் சிமெண்ட் ஆலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது
- நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது என எதிர்ப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், நெருஞ்சிக்கோரை, பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜநகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மணப்பத்தூர் ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
- அரியலூர் கலெக்டரிடம் புகார் மனு
அரியலூர்,
தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளரும், ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகரியுமான கு.முடிமன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நலிவுற்ற ஏழை, எளிய குடும்பங்கள் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது.
ஆனால் மணப்பத்தூர் ஊராட்சியில் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த திட்ட நிதிகள் நலிவுற்றவர்களுக்கு பயன்படுத்தப்படாமல், வேறு வழியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.எனவே ஊராட்சியை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
- அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 437 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கு காது கருவி, 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவற்றை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கோரோட் அறக்கட்டளை மூலம் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் உளவியல் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்றுள்ள 19 திருநங்கையருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வாரணவாசி பகுதியில் வாரணவாசி பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
- 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்,
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படிர் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து திருமானூர் ஒன்றியம் வாரணவாசி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, ராமசாமி, ரத்தினம் மற்றும் கீழப்பழுவூர் போலீசார் கலந்துகொண்டனர்.22 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பள்ளி அருகே 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 5 கிலோ அளவில் விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டுர் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 2 கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தி உள்ளார்.
- ஜெயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலால் பரபரப்பு நிலவியது
- தீயை அணைத்து பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காட்டில் இருந்து தீ எரிந்து புகை வெளியாவது குறித்து, அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்து போலீசார், பார்த்த போது மனித உடல் எரிந்து கொண்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே சாக்கு உதவியுடன் உடலின் மீது எந்த தீயை அணைத்து உள்ளனர். இருப்பினும் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கருகிற எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. இறந்தது ஆணா, பெண்ணா, என்பது கூட தெரியவில்லை.
இதனை அடுத்து உடையார்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் டிக்சி, மோப்பம் பிடித்தவாறு, வெண்மான் கொண்டான் கிராமம் மில் வரை சென்றது.
நேற்று காலை வடகடல்- குடிகாடு பிரிவு சாலையில் ரத்தம் அதிக அளவில் கொட்டிகிடந்தது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாலை மார்க்கமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரமும், வயல்வெளி மார்க்கமாக சுமார் 3 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.இது குறித்தும் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூரில் சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் தலைமையில் நடந்தது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், சித்த மருத்துவர் வேலுச்சாமி எழுதிய சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ஷான்பாஷா தலைமை தாங்கி, இந்நூலுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நூல்களை மருத்துவர் வேலுச்சாமி தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். நூலின் ஆசிரியர் வேலுச்சாமி, நூலின் முதல் பிரதியை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரையிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நூலகர் செசிராபூ நூலக பணியாளர்கள் வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் ஆசிரியர் செவ்வேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வாசகர்கள், நூலக புரவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நோயாளியுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியீடு: அரியலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணி நீக்கம்
- டாக்டர்கள், நர்சுகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.
அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தை மணிகண்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதர சமூக வலைதளங்களிலும் அதை வெளியிட்டார்.
இதை உயர் அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது மணிகண்டன், அவரது மனைவி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவமனை ஆபரேசன் அறையில் பணியில் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும், இது இணையத்தில் எப்படி வைரலானது என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். மணிகண்டன் போட்டோ எடுத்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரது மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.






