என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- அரியலூர் மாவட்டம் தண்டலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- தண்ணீர் பிரச்சனையை தீர்த்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை ஊராட்சி கிராம சபை கூட்டம் அரசு பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விக்ரம பாண்டியன், 9 வார்டு செயலாளர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் வரவில்லை அதை உடனடியாக பெற்று தர வேண்டும், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தி லிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகிறது .இந்த சாலை பணியின் போது குடிதண்ணீர் குழாய் உடைந்தது. நீண்ட நாட்களாக சரி செய்யாமல் பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜீவ் காந்தியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரின் சார்பில் புதிய பைப் அமைத்து குடிதண்ணீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு, கிராம சபை கூட்டத்தில் நன்றியையும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் வீடு திட்டத்தை வீடு இல்லாதவர்களுக்கு பெற்று தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை ஏற்று நடைமுறைக்கு வந்தவுடன் அதை உடனடியாக செய்து தர முயற்சி செய்வதாகும் அவர் கூறினார். இக்கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






