என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” நடை பயிற்சி தொடங்கப்பட்டது
- போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி தொடங்கப்பட்டது. அரியலூர் நகரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கி கல்லூன் சாலை, பல்லேன், அரசு மருத்துவமனைச் சாலை, பென்னி ஹவுஸ் தெரு, பெரம்பலூர் சாலை, சத்திரம் நகராட்சி நூலகம், தேரடி, அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டி ஏன், ஜெயங்கொண்டம் சாலை வழியாக அரசு பல்துறை அலுவலக கட்டிடம் வரை சென்று, மீண்டும் அங்கிருந்து திரும்பி அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைய 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயணத்தை நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் "நடப்போம் நலம் பெறுவோம்" நடை பயிற்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் நடைபயிற்சியினை மேற்கொண்டார். இதேபோன்று ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள். மேலும், நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு துவக்க இடம் மற்றும் இடையிடையே மருத்துவக் குழுவினர் முகாம் அமைக்கப்பட்டு அவர்கள் உடல்நலம் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பயண வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் இளைப்பாறும் இடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனி மேன் ஸ்வர்ணா, சின்னப்பா எம்.எல்.ஏ., கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும்துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அஜித்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்விஜயலட்சுமி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூன் மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விண்ணப்பிக்க நவம்பர் 10-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு
அரியலூர்,
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஆகியோர்களில் சிறந்தோருக்கு "அண்ணல் அம்பேத்கார்விருது" வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதினை பெறவிரும்பு வோர்அன்யலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங் குடியினர்நல அலுவலர் அல்லது தனிவட்டாட்சியர்(ஆதிந), அரியலூர், உடையார்பாளையம் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தரலாம். அதற்கான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நல அலுவலகத்திற்கு 10.11.2023 மாலை 5.00 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூர் அருகே கீழப்பழுர் காந்திநகரில் ரூ.4.85 லட்சத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது
- செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கீழப்பழுரில் செட்டிநாடு சிமெண்ட்ஆலை நிறுவனம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சுற்றி அமைந்துள்ள கிராம பகுதிகளுக்கு கல்வி வசதி, மருத்துவ சேவைகள், குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகின்றது. கீழப்பழுர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 4.85 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் வசதியுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலையின் தலைவர் முத்தையா, ஊராட்சிமன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, ஆலையின் பொது மேலாளர் ராஜவேல், முத்து கருப்பன், மனிதவளம் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா சிதம்பரம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
- அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.
- ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 485 மி.மீ. மழையினை பெறும். வழக்கமாக இந்தப் பருவ மழை அக்டோபர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக தொடங்கியது.
இருப்பினும் கடந்த அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.
பொதுவாக அக்டோபர் மாதத்தில் அரியலூர் மாவட் டத்தில் சராசரி மழைப்பதிவு 127.71 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சென்ற மாதம் 44.29 மிமீ பதிவாகியுள்ளது. பற்றாக்குறை 76 சதவீதமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டர். இதில் வடகிழக்கு பருவமழை யின் போது 485 மில்லி மீட்டர் மழையும், தென் மேற்கு பருவமழையின் போது 357 மில்லி மீட்டர் மழையும், கோடையில் மழையளவு 83 மி. மீட்டர் மழையும் பெற்று வந்தது. ஆனால் ஜனவரியில் இருந்து இதுவரை 440.95 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளது.
தென்மேற்கு பருவம ழையும் மாவட்டத்தில் சரியாக பெய்யவில்லை. ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே 231.74 மி.மீ., மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 140 மிமீ பதிவாகி யுள்ளது.
இது பருவகால சராச ரியை விட 57 மிமீ அதிகம். அதே நேரம் அக்டோபரில் எந்த நாளிலும் கனமழை பெய்யவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கி றது.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும் போது,
பொதுவாக அக்டோ பரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கு வார்கள். இந்த மாதத்தில் பெய்யும் மழை நெல் நாற்றுக்கு உதவும். இது நவம்பர் முதல் மற்றும் 2-வது வாரத்தில் வேகத்தை அதிகரிக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.
சம்பா சீசனில் வழக்கமாக 20,500 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நடவு செய்யப்ப டும். ஆனால் தற்போது மாவட்டத்தில் இதுவரை 7,300 ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி நடந்துள் ளது. நெல் நடவு செய்த பெரும்பாலான விவசா யிகள், பாசனத்திற்கு பம்ப் செட்டை நம்பியுள்ளனர்.
புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்த விவசாயிகள், இன்னும் சாகுபடி செய்யவில்லை. மேட்டூர் அணையில் நீர்வ ரத்து வேகமாக குறைந்து வருவதால், அணை மூடப்ப டுவதற்கு முன்பே, கால்வாய் மூடப்பட்டதால், இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரி நெல் நடவு பரப்பளவை விவசாயிகள் எட்டுவது சந்தேகம் என்றார்.
- அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
- எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்
அரியலூர்
அரியலூர்பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.
துணைதலைவர் அசோகன்,செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் அம்பி கா,ராமச்சந்திரன், நல்ல முத்து, குலக்கொ டி,வசந்த மணி,சகிலாதேவி, ராஜேந்திரன்,அன்பழகன், தனசெல்வி,கீதா, புள்ளியியல் அலுவலர் பால சுப்பிர மணி யன்,அலுவலக உதவியா ளர்கள் ரமேஷ், ராமராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-
புதுப்பாளையம்நெறிஞ்சிக்கோரை,பெரியநா கலூர்,அஸ்தி னாபுரம்,வாலாஜநகரம், தாமரைக்குளம் சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுத்தனர்.
ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,விவசாயிகள் கொடுத்துள்ள அந்த நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் நடத்தவுள்ளது. எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.
மீறி நடத்தப்பட்டால் அங்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தி்ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியு றுத்தினர். கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
- 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது
- உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
இந்தவகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தா.பழூர் பகுதி மற்றும் சிலால் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கலியமூர்த்தி, மகேஷ்குமார் என்பவர்களுக்கு சொந்தமான 2 கடைகள் தொடர் குற்றம் புரிந்தமைக்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதமாக என ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், துணை காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
- 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3-வது குழந்தை தேவை இல்லை ரமணா எண்ணினார்.
- அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரமணா. இவர்களுக்கு தாரணி என்ற மகளும், ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ரமணா கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3-வது குழந்தை தேவை இல்லை ரமணா எண்ணினார். இதனால் கர்ப்பத்தை கலைக்க அங்குள்ள ஒரு மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி தின்றதாக கூறப்படுகிறது.
இதில் ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதை அடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. உடனே சிசுவை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ரமணாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அக்டோபர் மாதத்தில் மழை அளவு குறைந்ததால் அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
- இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 485 மி.மீ. மழையினை பெறும். வழக்கமாக இந்தப் பருவ மழை அக்டோபர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக தொடங்கியது.
இருப்பினும் கடந்த அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.
பொதுவாக அக்டோபர் மாதத்தில் அரியலூர் மாவட் டத்தில் சராசரி மழைப்பதிவு 127.71 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சென்ற மாதம் 44.29 மிமீ பதிவாகியுள்ளது. பற்றாக்குறை 76 சதவீதமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டர். இதில் வடகிழக்கு பருவமழை யின் போது 485 மில்லி மீட்டர் மழையும், தென் மேற்கு பருவமழையின் போது 357 மில்லி மீட்டர் மழையும், கோடையில் மழையளவு 83 மி. மீட்டர் மழையும் பெற்று வந்தது. ஆனால் ஜனவரியில் இருந்து இதுவரை 440.95 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளது.
தென்மேற்கு பருவம ழையும் மாவட்டத்தில் சரியாக பெய்யவில்லை. ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே 231.74 மி.மீ., மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 140 மிமீ பதிவாகி யுள்ளது.இது பருவகால சராச ரியை விட 57 மிமீ அதிகம். அதே நேரம் அக்டோபரில் எந்த நாளிலும் கனமழை பெய்யவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கி றது.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும் போது,
பொதுவாக அக்டோ பரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கு வார்கள். இந்த மாதத்தில் பெய்யும் மழை நெல் நாற்றுக்கு உதவும். இது நவம்பர் முதல் மற்றும் 2-வது வாரத்தில் வேகத்தை அதிகரிக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.சம்பா சீசனில் வழக்கமாக 20,500 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நடவு செய்யப்ப டும். ஆனால் தற்போது மாவட்டத்தில் இதுவரை 7,300 ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி நடந்துள் ளது. நெல் நடவு செய்த பெரும்பாலான விவசா யிகள், பாசனத்திற்கு பம்ப் செட்டை நம்பியுள்ளனர்.புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்த விவசாயிகள், இன்னும் சாகுபடி செய்யவில்லை. மேட்டூர் அணையில் நீர்வ ரத்து வேகமாக குறைந்து வருவதால், அணை மூடப்ப டுவதற்கு முன்பே, கால்வாய் மூடப்பட்டதால், இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரி நெல் நடவு பரப்பளவை விவசாயிகள் எட்டுவது சந்தேகம் என்றார்.
- பள்ளிக்கு அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- கல்லாத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் முன் னிலை வகித்தார். அங்கன் வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மற் றும் ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற வேண்டும். தமிழ்நாடு முழு வதும் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.கிராமப்புற இளைஞர்க ளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் தகுதியான இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி.பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிக ளான சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடன டியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- வாரியங்காவலில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார்
அரியலூர்,
உள்ளாட்சித் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள், வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிறப்பாக பணிப்புரிந்த ஊழியர்களை கவுரவித்தல்,சிறப்பாக செயல்வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆண்டிமடம் அடுத்த வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பங்கேற்று பேசினார். பின்னர்
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் இலக்குவன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் தமிழ்செல்வன், வாரியங்காவல் ஊராட்சித் தலைவர் மணிசேகர் மற்றும் அரசு
அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
இதே போல், எருத்து க்காரன்பட்டி ஊராட்சியில், அதன் தலைவர் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவர் மா.முருகேசன், துணைத் தலைவர் அ.அம்பிகா, ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவர் செங்கமலை, துணைத் தலைவர் ம.செல்வி, தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவர் நா.பிரேம்குமார், துணைத் தலைவர் கவிதாமுருகேசன், வாலாஜா நகரத்தில், ஊராட்சித் தலைவர் அபிநாய இளையராஜா, துணைத் தலைவர் மு.குணசே கரன் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஏராளமான பொது மக்கள்,அரசுத்துறை அலுவலரகள் கலந்து கொண்டனர்.
- சிறுவளூர் அரசு பள்ளியில் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது
அரியலூர்,
அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துறையின் மாவட்ட தலைமை கண்காணிப்பு அலுவலக உதவி ஆய்வாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். காவல் மஞ்சித், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் சரண்யா கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.
- அரியலூர் மாவட்டம் தண்டலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- தண்ணீர் பிரச்சனையை தீர்த்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை ஊராட்சி கிராம சபை கூட்டம் அரசு பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விக்ரம பாண்டியன், 9 வார்டு செயலாளர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் வரவில்லை அதை உடனடியாக பெற்று தர வேண்டும், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தி லிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகிறது .இந்த சாலை பணியின் போது குடிதண்ணீர் குழாய் உடைந்தது. நீண்ட நாட்களாக சரி செய்யாமல் பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜீவ் காந்தியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரின் சார்பில் புதிய பைப் அமைத்து குடிதண்ணீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு, கிராம சபை கூட்டத்தில் நன்றியையும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் வீடு திட்டத்தை வீடு இல்லாதவர்களுக்கு பெற்று தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை ஏற்று நடைமுறைக்கு வந்தவுடன் அதை உடனடியாக செய்து தர முயற்சி செய்வதாகும் அவர் கூறினார். இக்கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






