என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மதுபான கடையை அகற்ற தீர்மானம்
    X

    அரசு மதுபான கடையை அகற்ற தீர்மானம்

    • பள்ளிக்கு அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • கல்லாத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் முன் னிலை வகித்தார். அங்கன் வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மற் றும் ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற வேண்டும். தமிழ்நாடு முழு வதும் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.கிராமப்புற இளைஞர்க ளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் தகுதியான இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி.பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிக ளான சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடன டியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    Next Story
    ×