என் மலர்
உள்ளூர் செய்திகள்

201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
- அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- வாரியங்காவலில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார்
அரியலூர்,
உள்ளாட்சித் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள், வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிறப்பாக பணிப்புரிந்த ஊழியர்களை கவுரவித்தல்,சிறப்பாக செயல்வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆண்டிமடம் அடுத்த வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பங்கேற்று பேசினார். பின்னர்
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் இலக்குவன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் தமிழ்செல்வன், வாரியங்காவல் ஊராட்சித் தலைவர் மணிசேகர் மற்றும் அரசு
அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
இதே போல், எருத்து க்காரன்பட்டி ஊராட்சியில், அதன் தலைவர் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவர் மா.முருகேசன், துணைத் தலைவர் அ.அம்பிகா, ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவர் செங்கமலை, துணைத் தலைவர் ம.செல்வி, தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவர் நா.பிரேம்குமார், துணைத் தலைவர் கவிதாமுருகேசன், வாலாஜா நகரத்தில், ஊராட்சித் தலைவர் அபிநாய இளையராஜா, துணைத் தலைவர் மு.குணசே கரன் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஏராளமான பொது மக்கள்,அரசுத்துறை அலுவலரகள் கலந்து கொண்டனர்.






