என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் நூல் வெளியீட்டு விழா
- அரியலூரில் சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் தலைமையில் நடந்தது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், சித்த மருத்துவர் வேலுச்சாமி எழுதிய சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ஷான்பாஷா தலைமை தாங்கி, இந்நூலுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நூல்களை மருத்துவர் வேலுச்சாமி தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். நூலின் ஆசிரியர் வேலுச்சாமி, நூலின் முதல் பிரதியை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரையிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நூலகர் செசிராபூ நூலக பணியாளர்கள் வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் ஆசிரியர் செவ்வேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வாசகர்கள், நூலக புரவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






