என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி
- அரியலூரில் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி , அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. மேலும் பேரணியில் கலந்து கொண்ட சுமார் 100 மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டு சென்றனர்.
Next Story






