search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durability"

    குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கொக்கனேரி, மேட்டுத் தெருவை சேர்ந்த வர் ஜியாபத்(வயது53).இவரது மனைவி ரியாஸ்பி (42). இருவரும் கருத்து வறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ரியாஸ்பி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

    இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பிைன கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வாழக்கு பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    விசாரணையின் முடிவில் மனைவியை கொலை செய்த ஜியாபத்துக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.சின்னதம்பி ஆஜராகினர்.

    • 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.
    • கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.

    திருப்பூர்,

    ஆயத்த ஆடை ரகங்களுக்கு ரசாயனங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகிறது.இதனால் அதிக தொகை செலவழித்து சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கவேண்டிய கட்டாயம், சுத்திகரிப்பில் வெளியேறும் கழிவு உப்புகளை அகற்றுவதுதில் சிக்கல் என ஏராளமான பிரச்னைகளை சாய ஆலை துறையினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஆடை உற்பத்தியில் இயற்கை சாயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

    உள்நாட்டில் பல நிறுவனங்கள் ரசாயனங்களுக்கு மாற்றாக, இயற்கை சாயங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மர பட்டை, இலை, பூ, காய், கனிகளை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றுவதற்கான இயற்கை சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கை சாயங்களில் உள்ள குறைகள் களையப்பட்டுவருகிறது.

    நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் அடல் இன்குபேஷன் மையம் சார்பில், டை கெம் வேர்ல்டு சாயம் மற்றும் கெமிக்கல் கண்காட்சி, அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.ஆமதாபாத், சூரத், மும்பை உள்பட நாட்டில் பல்வேறு பகுதி நிறுவனங்கள், 40 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களுக்கு நிறவேற்றும் புதுவகை சாயங்கள் மற்றும் ரசாயனங்களை காட்சிப்படுத்தின.

    ஆமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்கான புதுமையான இயற்கை சாயங்களை உருவாக்கியுள்ளது.

    'கேட்டனைசேஷன்' என்கிற பிராசசிங் செய்யப்பட்ட நூலில் துணி தயாரிக்கும்போது, உப்பு இன்றி சாயமேற்றமுடியும். மேலும் கிரே நிற துணியை, ஒருமுறை மட்டும் சாயமேற்றினால் போதும். அடர் மற்றும் வெளிர் நிற கோடுகளுடன் கூடிய துணியாக மாறிவிடும். மும்பையைச்சேர்ந்த ஒரு நிறுவனம், கேட்டனைசேஷனுக்கு தேவையான ரசாயனங்களை கண்காட்சியில் வைத்திருந்தது.பிராசசிங்கின்போது துணிக்கு தீப்பிடிக்காத தன்மை, வைரஸ் தொற்று தடுப்பு, தண்ணீர் ஒட்டாத தன்மை அளிக்கும் பலவகையான ரசாயனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது:-

    டைஸ் அண்ட் கெம் கண்காட்சி, திருப்பூர் சாய ஆலை துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. குறிப்பாக இயற்கை சாயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.ஒரே நிறத்தில் பலவித வேறுபாடுகள், சாயமேற்றுதலுக்குப்பின் வேகமாக நிறம் இளகுதல் ,பிளீடிங் இவையெல்லாம் இயற்கை சாயமேற்றுதலில் மிகப்பெரிய சவால்களாக இருந்தன. இப்பிரச்னைகள் தற்போது களையப்பட்டுள்ளன. மாறுபாடில்லாத ஒரேவகை நிறம், சாயமேற்றியபின் அதிக நீடிப்புத்தன்மை மிக்க புதுவகை இயற்கை சாயங்கள் அறிமுகமாகியுள்ளன.

    எல்லா வகையிலும், ரசாயன நிறமிகளுக்கு இணையாக இயற்கை சாயங்களை பயன்படுத்தி துணிக்கு சாயமேற்றமுடியும் என்கிற நிலையை அடையும் தூரம் தொலைவில் இல்லை.வெளிநாட்டு வர்த்தகர்கள் இயற்கை சாயமேற்றுதலுக்கான ஆர்டர்கள் வழங்கினாலும் இனிசிறப்பாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. கேட்டனை சேஷன் முறை மேம்படுவதன்மூலம் உப்பு இல்லா சாயமேற்றுதல் அதிகரிக்கும்.இவ்வாறுஅவர் கூறினார்.

    ×