என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் விலக்கை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    நீட் விலக்கை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

    தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    குழுமூர் கிராமத்தில் உள்ள மறைந்த மாணவி அனிதா திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவச ங்கர் கலந்து கொண்டார். அனிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், நீட் விலக்கை வலியுறுத்திகையெ ழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தி.மு.க. சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ராமராஜன், மருத்துவர் அணி அமைப்பாளர் சஞ்சய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகி கள் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

    Next Story
    ×