என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
    X

    அரசு கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

    • அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சுகாதார சீர்கேட்டை சரி செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் கண்டுகொள்ளாததால் மாணவர்கள் ஆத்திரம்

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக்க ல்லூரி அருகே அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை சுத்திகரிக்கும்போது அதிக அளவில் துர்நாற்றம் வீசுவ தாகவும், இதனால் அருகே கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாண வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கூறி கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராமகிரு ஷ்ணன் உறுதி அளித்தார்.அதன்பேரில் மாண வர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் தற்போது வரை இந்த பிரச்சினை சரி செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர்.இதையடுத்து வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கல்லூரி முத ல்வர், வகுப்பு அறை களை மாற்றித்தருவதாக உறுதியளித்தார். எனினும் மாணவர்கள் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்போவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×