என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் நிலையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்ய கோரிக்கை
    X

    காவல் நிலையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்ய கோரிக்கை

    • அரியலூர் மாவட்டத்தில்காவல் நிலையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்ய கோரிக்கை
    • மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர், போலீஸ் எஸ்.பி.யிடம் மனு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் சில காவல் நிலைய எல்லைகளை மறுவரையறை செய்யவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து கோரிக்கை மனு அளித்தார்.

    அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரிய லூர் மாவட்டத்தில் சில காவல் நிலையங்கள் அதன் எல்லையிலும், அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வேறு ஒரு பகுதியிலும் இருக்கிறது.

    குறிப்பாக கயர்லாபத் காவல் நிலையம் வி.கைகாட்டி அடுத்த தேளூரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியானது அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் தொடங்குகி றது. இதனால் புகார் அளிக்கச் செல்லும் பொது மக்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள், வழக்குரைகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இதே போல் புதுப்பா ளையம் அருகேயுள்ள சிறுவளூர் கிராம மக்கள் புகார் அளிக்கச் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து அரியலூர் காவல் நிலை யத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த குறைபாட்டை நீக்கி மற்றும் மாவட்டத்தில் உள்ள மொத்த 16 காவல் நிலைய எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×