என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
- அரியலூர்அரசு கலைக் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறுகிறது
- 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், வேலை வாய்ப்பு மையம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மத்திய, மாநில அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.இப்பயிற்சியை அக்கல்லூ ரியின் முதல்வர்டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட தேசிய தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் இளம் தொழிலர் எபினேசர் கலந்து கொண்டு, கல்வி பயிலும் காலத்திலேயே கிடைக்கும் இந்த வாய்ப்பி னை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வேண்டும் என்றார்.கல்லூரியில் தற்போது இறுதி ஆண்டு பயின்றுவரும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளைச்சார்ந்த 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர்கருணாகரன், பொருளாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்ப ினர்கள்தண்டபாணி, சிவக்குமார், ஜெயக்குமார், கென்னடி, கண்ணன், மேரி வயலட் கிருஸ்டி, ஆனந்த், காமஞ்சரி, நேசமதி உறுப்பினர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தர்மராஜ், ஸ்ரீதேவி, ஸ்வாதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.






