என் மலர்
அரியலூர்
- அரியலூரில் தமிழக அரசின் சாதனைகள் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- 10 பயனாளிகளுக்கு ரூ.56,250 லட்சம் மதிப்பீட்டல் நலத்திட்ட உதவி–கள் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூரில் 10 நாட்கள் நடைபெறும் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. காம–ராஜர் ஒற்றுமைத்திட–லில் நடைபெற்ற நிகழ்ச்சி–யில் கலந்து கொண்ட போக்கு–வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ–சங்கர், கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வை–யிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகை–யில் கடந்த ஓராண்டில் அரசின் அனைத்துத் துறை–களின் சார்பில் செயல்ப டுத்திய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணி–வகுப்பு குறித்து ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறை–களை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறு–கிறது.
இந்த புகைப்படக்கண் காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தான திட்டங்களான பெண்க–ளுக்கு இலவச பேருந்து பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, பசுமை தமிழகம், நம்மைக் காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 21.01.2023 முதல் 30.01.2023 வரை தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாண–விகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொள்ளும் விழிப்பு–ணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடை–பெறவுள்ளதுடன், பெரியவர் முதல் சிறியவர் வரை பொழுதுபோக்குவ–தற்கான பொழுதுபோக்கு அம்சங்களும், பாரம்பரிய உணவு கடைகள் அடங்கிய உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழாவுக்கு வந்து தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என்றார். பின்னர் அவர், 10 பயனாளிகளுக்கு ரூ.56,250 லட்சம் மதிப்பீட்டல் நலத்திட்ட உதவி–களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ் வதி, எம்.எல்.ஏ.க்கள் அரி–யலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.–க.கண்ணன் ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.–சுருளிபிரபு, அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணன், நகராட்சி ஆணையர் தம–யந்தி, உதவி சுற்றுலா அலு–வலர் சரவணன் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்
- இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாநில அளவிலான சைக்கிள் போட்டி அரியலூர் மாவட்ட கல்வி துறையின் சார்பாக கீழப்பழுவூரில் காலை 7.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றது.
போட்டியை திருமானூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி சக்கரவர்த்தி, கீழப்பழுவூர் ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, பாஸ்கர், கோவிந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத் தனர். இந்நிகழ்ச்சியில் அரி–யலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு–வலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உத–வியாளர்கள் ராஜப்பிரி–யன், குணசேகரன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, செல்வக் குமார், சரவணன், முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.
போட்டி ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், கண்ணன் ஆகியோர் செய்தி–ருந்தனர்.போட்டியில் வெற்றி–பெற்ற–வர்கள் விபரம் வருமாறு:- 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மதுரை அரசு பள்ளி மாணவி பானுஸ்ரீ முதலிடமும், கோவை கோடாநத்தம்பட்டி பள்ளி மாணவி சாதனாஸ்ரீ இரண்டாமிடமும், சிவ–கங்கை பாலாம்பட்டி அரசு பள்ளி மாணவி மதுமிதா 3-ம் இடமும் பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட் டோருக்கான மாணவிகள் பிரிவல் கோவை பள்ளி மாணவி கார்த்தியாயினி முதலிடமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சுவாதிகா இரண்டாமிடமும், கரூர் பசுபதிபாளையம் பள்ளி மாணவி ரமணி மூன்றாமி–டமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட் டோர் மாணவிகள் பிரி–வில் புதுக்கோட்டை பள்ளி மாணவி கோகிலா முதலிடமும், தஞ்சாவூர் அய்யம்பேட்டை பள்ளி மாணவி கீர்த்தனா இரண்டாமிடமும், கரூர் பஞ்சம்பட்டி பள்ளி மாணவி ஜனனி மூன்றாமிடமும் பெற்றனர்.
- அரியலூர் அருகே தை அமாவாசையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிரா–மத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் தை அமாவா–சையை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிரா–மத்தில் உள்ள சாமுண் டீஸ்வரி கோவில் சன்ன–தியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தி–யங்கார தேவிக்கு மாதந்ேதாறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிள–காய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அம்மாவாசை அன்று நடைபெற்ற சண்டி–யாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் திருமண்டகுடி தனியார் சர்க்கரை ஆலை வாங்கிய ரூ.350 கோடியை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே நடத்த வேண்டும், விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
- வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில் அரியலூர் நகராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட பணி, அஸ்தினாபுரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மேலக்கருப்பூரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.31.48 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி, பொய்யூர், கருப்பிலாக்கட்டளை, சின்னப்பட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, கீழகொளத்தூர், கரைவெட்டி, இலந்தைக்கூடம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆனந்தன், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- அரியர் பணத்தை வழங்க கோரி போராட்டம்
- 15 ஆயிரம் ரூபாய் வழங்கபடவில்லை என குற்றச்சாட்டு
ஜெயகொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுமார் 140 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறிய நிலையில் இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை, பிடித்தம் செய்யப்பட்டுள்ள அரியர் பணத்தை 50 மாதமாக நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை, தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, சீருடைகளோ வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
- அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை....
- நோய் பரவும் அபாயம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர் வாராததால் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்நிலையில் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது பன்றிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பன்றிகள் அதிக அளவில் இறந்து கிடப்பதால் நோய் ஏற்பட்டு பன்றிகள் இறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பன்றிகளால் துர்நாற்றம் வீசுவதாலும், நாய் மற்றும் பறவைகள் இதை உண்பதாலும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஏரியில் உள்ள நீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்து பன்றியை தண்ணீரில் வீசி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.மேலும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இறக்கும் பன்றிகளை புதைக்காமல் தூக்கி எறியும் சம்பவம் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இறந்த பன்றிகளை அப்புற படுத்தி தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தர உத்தரவு
- சிறையில் அடைப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .திருமானூர்அடுத்த கரைவெட்டி பரதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சக்திவேல்(வயது 20). இவர் கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் காதலித்து வந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் 3 மாதம் கர்ப்பிணியான அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சக்திவேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சக்திவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.
- பணி பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
- கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2006-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைபடி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான மாநிலத் தகுதித் தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அக்கல்லூரியில் பணிப்புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- கவர்னரை கண்டித்து நடைபெற்றது
- கண்டன கோஷம் எழுப்பப்பட்டது
அரியலூர்,
கவர்னரை நடவடிக்கையை கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் ஆளுநர் அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இர.மணிவேல், கே.கிருஷ்ணன், து.அருணன், எம்.வெங்கடாசலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் உள்ளது. ஸ்டாலின் தற்போது பொம்மை முதல்வராக செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க.வில் கடைக்கோடி தொண்டனும் பொது செயலாளர் ஆகலாம். ஆனால் தி.மு.க.வில் தற்போது உதயநிதி அமைச்சர் ஆனது போல அடுத்துடுத்து அவர்களது குடும்பமே முதல்வராவர். மகன் என்ற ஒரே காரணத்தினால் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் தி.மு.க.வுக்காக என்ன செய்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவே அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டுவது, குடிமராமத்து பணிகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மருத்துவ படிப்புக்கான செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 564 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிய உதயநிதி இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் காவிரிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தமிழகம் போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து 20 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் வழங்கப்படவில்லை. 1 கோடியே 1 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு பெரிய பொய்யை சொல்லியுள்ளார். அவருக்கு பொய் சொல்லுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கலாம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரியலூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை செய்யபடஉள்ளது
அரியலூர்:
அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரியின் ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியங்குடிகாடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, இதேபோல் தேளூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பளவர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை, நடுவலூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி. மேலும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய ஊர்கள் முழுவதும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.






