என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் தமிழக அரசின் சாதனைகள் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    X

    அரியலூரில் தமிழக அரசின் சாதனைகள் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    • அரியலூரில் தமிழக அரசின் சாதனைகள் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • 10 பயனாளிகளுக்கு ரூ.56,250 லட்சம் மதிப்பீட்டல் நலத்திட்ட உதவி–கள் வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூரில் 10 நாட்கள் நடைபெறும் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. காம–ராஜர் ஒற்றுமைத்திட–லில் நடைபெற்ற நிகழ்ச்சி–யில் கலந்து கொண்ட போக்கு–வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ–சங்கர், கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வை–யிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகை–யில் கடந்த ஓராண்டில் அரசின் அனைத்துத் துறை–களின் சார்பில் செயல்ப டுத்திய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணி–வகுப்பு குறித்து ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறை–களை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறு–கிறது.

    இந்த புகைப்படக்கண் காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தான திட்டங்களான பெண்க–ளுக்கு இலவச பேருந்து பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, பசுமை தமிழகம், நம்மைக் காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 21.01.2023 முதல் 30.01.2023 வரை தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாண–விகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொள்ளும் விழிப்பு–ணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடை–பெறவுள்ளதுடன், பெரியவர் முதல் சிறியவர் வரை பொழுதுபோக்குவ–தற்கான பொழுதுபோக்கு அம்சங்களும், பாரம்பரிய உணவு கடைகள் அடங்கிய உணவு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழாவுக்கு வந்து தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என்றார். பின்னர் அவர், 10 பயனாளிகளுக்கு ரூ.56,250 லட்சம் மதிப்பீட்டல் நலத்திட்ட உதவி–களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ் வதி, எம்.எல்.ஏ.க்கள் அரி–யலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.–க.கண்ணன் ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.–சுருளிபிரபு, அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணன், நகராட்சி ஆணையர் தம–யந்தி, உதவி சுற்றுலா அலு–வலர் சரவணன் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×