என் மலர்
அரியலூர்
- சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வினோத்குமார்(வயது29). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர்.
இந்்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தாரர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ராஜா ஆஜரானார்.
- பொது மக்களிடமிருந்து 297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
- நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரியலூர் வட்டாரத்தைச் சார்ந்த 4 உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,25,000 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். சென்னையில அன்மையில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுதிறனாளி சிவகாமி, கார்த்திக்ராஜா, வெள்ளி பதக்கம் வென்ற பாபு ஆகியோர் கலெக்டரை சந்தித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கிராம மக்கள் கோரிக்கை மனு
- 3 மாதங்களாக ஆக்கிரமிப்பு என பொதுமக்கள் குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வடுகர்பாளையம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள பொது இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வடுகர்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை 8 நபர்கள் சில ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையடுத்து 7 நபர்கள் ஆக்கிரமிப்பை கைவிட்டனர். அதில் ஒருவர் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் 3 மாதங்களாகியும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இது குறித்து ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டீக்கடையில் விற்பனை
- ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு விருத்தாசலம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது டீக்கடை நடத்தி வந்த முனிதிரையன்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது29) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அவர் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட பாக்கு பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விஜய்யை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 3-வது நாளாக தொடரும் போராட்டம்
- பணி பாதுகாப்பு கோரி போராட்டம்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் 3 ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2006-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைபடி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான மாநிலத் தகுதித் தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அக்கல்லூரியில் பணிப்புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
- எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.பேரணிக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசினார். பேரணியானது கல்லூரியில் துவங்கி அண்ணா சிலை, நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்களை எம்.எல்.ஏ. வாசிக்க பின் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தில் சில குடும்பங்கள் படும் அல்லல்கள் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை வடிவேல், கணினி துறை கார்த்திகேயன், வணிகவியல் துறை சக்திமுருகன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீசார் மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.
- விவசாய நிலத்தில் கோவிந்தசாமி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
- கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வி.கைகாட்டி அருகேயுள்ள தேளுர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி நாட்டார் (வயது 85). இவர் ஊர் நாட்டாண்மையாகவும் இருந்து வந்தார். இவரது மகன் முருகேசன், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
முருகேசனின் மகன் எழில் நிலவன் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் திருச்சியில் வசித்து வருகிறார்கள்.
கோவிந்தசாமி மட்டும் தேளூர் கிராமத்தில் உள்ளார். தினமும் காலையிலேயே வீட்டை விட்டு வெளியில் செல்லும் அவர் மாலையில் திரும்பி வருவது வழக்கம். இந்தநிலையில் விளங்குடியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று காலை கோவிந்தசாமி சென்றுள்ளார். மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் கோவிந்தசாமி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் கையில் அணிந்திருந்த தங்க மோதிரங்களை காணவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனடியாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்குடி பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கோவிந்தசாமிைய கொலை செய்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பாரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கீரைக்கார தெருவில் உள்ள சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் உடையார்பாளையம் ராஜ வீதியில் உள்ள பக்த ஆஞ்சநேயர், உடையார்பாளையம் கருட கம்ப தெருவில் உள்ள கருடகம்ப ஆஞ்சநேயர், உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு புளியந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கங்கவடங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(வயது 42), மும்மூர்த்தி, ஜெயக்குமார், சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தமிழ்நாதன், சுந்தரவடிவேல், பாலா, கார்த்திக், பாலையா, அன்பழகன் ஆகிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 3 பேரின் வீட்டின் கதவு நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது
- விவசாயி வீட்டில் நகை- வெள்ளி பொருட்கள் கொள்ளை நடந்துள்ளது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகசுந்தரவடிவேல்(வயது 62). விவசாயியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கும், அவரது மனைவி மாலாவிற்கும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கனகசுந்தரவடிவேல் உள்பட 3 பேரின் வீட்டின் கதவு நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்துள்ளனர். இதை அடுத்து கனகசுந்தரவடிவேலுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சொந்த ஊருக்கு விரைந்து வந்த கனகசுந்தரவடிவேல் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3 பவுன் தங்க நகைகளும், நாணயங்களும், 1 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது
- பக்தர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த மஞ்சமேடு கிராமத்திலுள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், ஊரின் நன்மைக்காகவும், புதிதாக சுவாமிகளின் பஞ்சலோக சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து 10 மணிக்கு மேல், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீவரதராசப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகள் திருமண கோலத்துடன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.சுவாமிகளின் இந்த திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளை பெற்றனர்.
- மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தது. கீழப்பழுவூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 14, 17, 19 வயதுடைய பள்ளி மாணவ, மாணவிகள் 3,500 பேர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தனித் திறன்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், ஷாயின்ஷ, ரவிச்சந்திரன், மோகன்தாஸ், மரிய பிரிட்ஜித், வீரபாண்டியன், பாண்டியன், ஜாக்குலின் உஷா, மேரி, கரோலின், கண்ணன், சுப்ரமணியன், குறிஞ்சிவேந்தன், வினோத்குமார், தர்மலிங்கம் வந்தியத்தேவன், ரவி, அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர்.






