என் மலர்
அரியலூர்
- ஏரியில் மிதந்த முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது
- இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பப்ளிக் பவுண்டேஷன் தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சகிலன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் இரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் தலைமையிலான அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் செந்தில்ராணி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் ரத்தங்களை சேகரித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
- ஆண்டிமடம் அருகே கொடிகம்பத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் காயம் அடைந்தனர்
- எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது
ஜெயங்கொண்டம்:
சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது65) (தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்). இவரும் இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (73) ஆகிய மூவரும் காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயிலுக்கு சென்றனர். காரை சென்னை சிட்லபாக்கம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் சபரிவாசன் ஓட்டினார்.
கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பினர். ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோட்டில் ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சபரிவாசன், விபத்தில் இறந்து போன மனோகர் மனைவி பானுமதி, உறவினர் புவனேஸ்வரி, ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
இதையடுத்து அவ்வழியைச் சென்றவர்கள் 108க்கு தகவல் தெரிவித்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் போலீசார் இறந்து போன மனோகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்
- அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
அரியலூர்ஞ
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமண–சரஸ் வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உலக சமா–தானத்தை விரும்பும் பொருட்டு வெண் புறாக் களை பறக்க–விடப்பட்டன.
அரியலூர்:
பின்னர் கலெக்டர் பெ.–ரமண–சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகி–யோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பனியாற்றிய 162 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலை–வாணி, மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜய்சங்கர், பிற்பட்டோர் அலுவலர் குமார், ஆதி திராவிட நலஅலுவலர் விஜயபாஸ்கர், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் பழனி–சாமி, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்து–கிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணை–பதிவாளர் தீபாசங்கரி, இணைஇயக்குனர் ஜெயரா–மன், ஊரக வாழ்வா–தார திட்ட இயக்குனர் முரு–கண்ணன்,
செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரி தேவேந்திரன், மணிவண்ணன், கலெக்ட–ரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரசு மருத்து–வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடை–யார்பாளையம் பரிமளம், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கி–யம் விக்டோரியா, ஜெயங் கொண்டம் துரை, ஆண்டிமடம் அலிபுரகு–மான்,
அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தேன்மொழி, நகராட்சி கமிஷனர் தம–யந்தி, யூனியன் கமிஷ–னர் அரியலூர் ஸ்ரீதேவி, செந்துறை விஸ்வநாதன், தமிழரசன், திருமானூர் ஜெயராஜ், ராஜா, ஜெயங் கொண்டம் முருகா–னந்தம், அமிர்த–லிங்கம், ஆண்டி–மடம் ஜாகிர்உசேன், குரு–நாதன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் காம–ராஜ், ரவிசேகரன், டி.எஸ்.பி. ஆயுதப்படை மணவா–ளன், அரியலூர் சங்கர்கணேஷ், ஜெயங் கொண்டம் ராஜா சோமசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு பிரிவு சுேரஷ் குமார், சமூகநீதி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், கார்த்திகேயன் உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து–கொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பு கிராமசபை கூட்டம் நடை–பெற்றது.
- மாநில அளவில் தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதை அரியலூர் கலெக்டருக்கு கவர்னர் ரவி வழங்கினார்.
- விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன.
அரியலூர்
சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற மாநில விருதுகள் வழங்கும் விழாவில் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அலுவலர்கள் மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன. அதில், அரியலூர் மாவட்டத்திற்கு தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதினை கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு கவர்னர் ரவி வழங்கி, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான விருதினை கவர்னர் ரவி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்துக்கு வழங்கினார். மேலும், சுவர் ஓவியப்போட்டி சிறப்பு பள்ளி மாநில அளவில் 2-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்குரோடு ஹெலன் கெல்லர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவன் சதீசுக்கும், இதேபோன்று மாநில அளவில் 3-வது இடம் பெற்ற மாணவன் அன்புமணிக்கும், ரங்கோலி போட்டியில் மாநில அளவில் 8-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சியைச் சேர்ந்த ஆப்பிள் சுயஉதவிக்குழுவினருக்கும் கவர்னர் ரவிகையால் விருதுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கணவர் வினோத்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த செய்தி அறிந்த இளமதி தனது மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் வினோத்குமார் (வயது 33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளமதி என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வினோத்குமார் வெளிநாடு சென்று விட்டார். இதையடுத்து, வினோத்குமாரின் தந்தை சீமான், அவரது தம்பி ரஞ்சித்குமார், தாய் லலிதா ஆகியோர் இளமதியிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த இளமதி கணவர் வரும் வரை தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில் கணவர் வினோத்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த செய்தி அறிந்த இளமதி தனது மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டனர். மேலும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் வினோத்குமார் சென்னையில் இருப்பதாக கூறியதால் அங்கு சென்று இளமதி பார்த்தார். அப்போது அங்கு ரெஜினா என்ற பெண்ணுடன் வினோத்குமார் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வினோத்குமார் இளமதியை தகாத வார்த்தைகளால் திட்டி ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது தாங்கள் தான் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறினர்.
- ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய கூலி தொழிலாளி கைது செய்யபட்டார்
- ராம்குமார் அத்து மீறி வளர்மதியின் வீட்டின் உள்ளே நுழைந்து வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி வளர்மதி (வயது50). இந்நிலையில் இவர் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (51) என்பவர் (கூலி தொழிலாளி) அத்து மீறி வளர்மதியின் வீட்டின் உள்ளே நுழைந்து வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த வளர்மதியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றவாரே ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
- ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரோஸ் அலெக்சாண்டர், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, வி.ஏ.ஓ. வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் செல்லகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது எனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு நோட்டு வாங்க மாட்டோம், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் முழக்கங்கள் செய்தவாரே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா நன்றி கூறினார்.
- நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்க–ளை–யும் ஈடுப–டுத்தி மிக–வும் ஏழை, மாற்றுத்தி–ற–னாளி நலிவுற்றோர் என மக்க–ளால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-அரியலூர் மாவட்டத்தில் நாளை (26-ந்தேதி) அனைத்து ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்க–ளை–யும் ஈடுப–டுத்தி மிக–வும் ஏழை, மாற்றுத்தி–ற–னாளி நலிவுற்றோர் என மக்க–ளால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
தற்போது ஏற்கனவே மக்கள் நிலை ஆய்வில் அடையாளம் காணப்பட்ட இலக்கு மக்கள் குடும்பங்க–ளில் இருந்து சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், குடியிருப்பு அளவிலான மன்றம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் மூலம் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆன குடும்பங்களையும் தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் மிகவும் ஏழை, ஏழை நிலையி–லிருந்து நடுத்தரம் மற்றும் வசதி என அடையாளம் காணப்பட்டவர்களையும் மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யலில் இருந்து நீக்கப்படு–வதற்காகவும் விடுபட்ட, புதிய இலக்கு மக்கள் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளால் சரிபார்க் கப்பட்டு, பொது–மக்க–ளின் பார்வைக்கு காட்சிப்ப–டுத் தப்பட்ட பட்டி–யலை மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யலில் 2-23 ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஆதலால் அந்த கிராம சபை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனை–வரும் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து– கொண்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யல் ஒப்புத–லுக்கு உங்க–ளின் முழு பங்க–ளிப்பை–யும் வழங்கு–மாறு கேட்டுக் கொள்ளப்படுகி–றது. இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.
- அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 82 பேர் கைது செய்யபட்டனர்
- போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்துறைகளிலும் 240 நாள் பணிபுரிந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், உடலுழைப்பு-கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6,000க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவை ஆன்லைன் முறையை ரத்து செய்து பழையப்படி நேரடி பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட 82 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ராமநாதன், ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர்கள் தனசிங், மாணிக்கம், திருமானூர் ஒன்றியச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் அருகே காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது
- டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த மாத்தூர், காமரசவல்லி ஆகிய கிராமங்களில் குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். காமரசவல்லி கிராமத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவராமன், விவின் ஆகியோர் கொண்ட குழுவினர், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு மற்றும் உண்ணிகள் அழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் டெங்கு, மலேரியா, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும், கொசு ஒழிப்பு மற்றும் கொசுக்களால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதே போல் மாத்தூர் கிராமத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்
- தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டு பேசியது: தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளில் 21 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
குறைந்த விலையில் பொருள்களையும், சேவைகளையும் நுகர்வோர் பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்களைப் போல விற்பனை மற்றும் சேவை வழங்கும் பணிகளை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்குகின்றன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
பிரச்சனை ஏற்படும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படும் குடிமைப்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள், கடன் சங்கங்கள், வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கூட்டமைப்புகள் அனைத்தும் நுகர்வோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவது, நியாயமற்ற ஒப்பந்தத்தை திணிப்பது போன்ற நுகர்வோருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்றார். பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். திருசெங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குனர் விஜய்சக்தி பங்கேற்று பேசினார். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார்.






