என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 82 பேர் கைது
- அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 82 பேர் கைது செய்யபட்டனர்
- போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்துறைகளிலும் 240 நாள் பணிபுரிந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், உடலுழைப்பு-கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6,000க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவை ஆன்லைன் முறையை ரத்து செய்து பழையப்படி நேரடி பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட 82 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ராமநாதன், ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர்கள் தனசிங், மாணிக்கம், திருமானூர் ஒன்றியச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






