என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் சமர்ப்பிக்க உள்ளதால் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு
    X

    மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் சமர்ப்பிக்க உள்ளதால் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

    • நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்க–ளை–யும் ஈடுப–டுத்தி மிக–வும் ஏழை, மாற்றுத்தி–ற–னாளி நலிவுற்றோர் என மக்க–ளால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-அரியலூர் மாவட்டத்தில் நாளை (26-ந்தேதி) அனைத்து ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்க–ளை–யும் ஈடுப–டுத்தி மிக–வும் ஏழை, மாற்றுத்தி–ற–னாளி நலிவுற்றோர் என மக்க–ளால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    தற்போது ஏற்கனவே மக்கள் நிலை ஆய்வில் அடையாளம் காணப்பட்ட இலக்கு மக்கள் குடும்பங்க–ளில் இருந்து சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், குடியிருப்பு அளவிலான மன்றம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் மூலம் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆன குடும்பங்களையும் தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் மிகவும் ஏழை, ஏழை நிலையி–லிருந்து நடுத்தரம் மற்றும் வசதி என அடையாளம் காணப்பட்டவர்களையும் மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யலில் இருந்து நீக்கப்படு–வதற்காகவும் விடுபட்ட, புதிய இலக்கு மக்கள் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளால் சரிபார்க் கப்பட்டு, பொது–மக்க–ளின் பார்வைக்கு காட்சிப்ப–டுத் தப்பட்ட பட்டி–யலை மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யலில் 2-23 ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    ஆதலால் அந்த கிராம சபை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனை–வரும் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து– கொண்டு மக்கள் நிலை ஆய்வுப்பட்டி–யல் ஒப்புத–லுக்கு உங்க–ளின் முழு பங்க–ளிப்பை–யும் வழங்கு–மாறு கேட்டுக் கொள்ளப்படுகி–றது. இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.

    Next Story
    ×