என் மலர்
அரியலூர்
- செந்துறையை அடுத்த பொய்யாதநலலூர் அருகே ராயம்புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- தனியார் பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. காலை நேரம் என்பதால் கூலி வேலை, கட்டிட வேலைக்கு செல்வோர் ஏராளமானோர் அதில் பயணம் செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
இதற்கிடையே செந்துறையை அடுத்த பொய்யாதநலலூர் அருகே ராயம்புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.
மேலும் தற்போது அந்த பகுதியில் சாரலுடன் தொடர் மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாக காணப் படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை துறையூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கடந்து சென்ற போது சாலைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் சக்கரம் இறங்கியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான பஸ்சிலிருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் வெளியேறினர். விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உதவினர். அவர்கள் பேருந்தின் மீது ஏறி பயணிகளை காப்பாற்றினர். மேலும் பேருந்தின் மீது ஏறி கண்ணாடிகளை உடைத்து காயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் செந்துறையை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் (வயது 20), உடல் நசுங்கி பேருந்துக்கு உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை கொண்டு செல்வதற்காக, அப்பகுதியினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அப்பகுதியில் கடந்து சென்ற வாகனங்கள் உதவியுடன் அக்கம் பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த செந்துறை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்தது.
- அன்னதானம் நடத்த தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். திருச்சி மண்டல பொறுப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வரும் 5-ந் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவை அனைத்து கிராம சங்கங்களிலும் சிறப்பாக நடத்துவது, பெரம்பலூரில் உள்ள ஆதரவற்றோர் மாணவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் அன்னதானம் செய்வது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சன்மார்க்க சங்கங்களை ஏற்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பது, வள்ளலார் 200 விழாவை பெரம்பலூரில் சிறப்பாக நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் சன்மார்க்க பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள் மற்றும் திருவருட்பா ஒப்புவித்தல் ஓவியப்போட்டி நடத்துவது, வடலூரில் தைப்பூசத்தன்று தர்ம சாலையில் சேவை செய்ய தொண்டர்களை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் பலியானார்
- இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர் புகார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ரங்க–சாமி. இவரது மனைவி வைரம் (வயது60). ரங்கசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் வைரம் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களா–கவே வைரம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படு–கிறது.
இதனால் அவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வைரத்திற்கு கடந்த 27ந்தேதி இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவரை அப்பகுதியில் உள்ள சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்து விட்டார்.
இதனால் தனது அத்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப–திந்து விசாரித்து வருகின்ற–னர்.
- சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
- தகுதியான நிறுவனங்கள் இணைய–தளத்தில் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ் வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப–தாவது:- தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில், சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்துக்கு ஒரு விருது வீதம் 37 நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என அறி–வித்தது. இவ்விருதில் ரூ.1 லட்சம் பரிசு தொகை–யும், நற்சான்றிதழும் வழங்கப் படும். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபடும் தனியார், பொதுத் துறைகளை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனி நபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விரு–தினை பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேர–டியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்து–வமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இவ்விருது பெற தகு–தியற்றவை ஆகும். மேற்கண்ட நிறுவனங்க–ளால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி–களே விருது வழங்குவ–தற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.
விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவை–களில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். மேலும், பல்வேறு சமூக நல மேம்பாட்டு பணிகளுக்கு விருது வழங்குவதற்கு பரிசீ–லிக்கப்படும். நிறுவனங்க–ளின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்விருதுக்கு தகுதியான நிறுவனங்கள் இணைய–தளத்தில் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜெயங்கொண்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை திருமாவளவன் தொடங்கி வைத்தார்
- முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் மாடர்ன் கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 143 தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் 11 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் நகர்மன்றதலைவர் சுமதி சிவக்குமார், மாடர்ன் கல்விக்குழுமத்தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் திருச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான பயிற்சி மைய உதவி இயக்குநர் கலைச்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் நகராட்சி முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
- அரியலூர் அருகே கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
- மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. கொடுக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தோற்றம், மக்களின் பொருளாதார நிலைமை, பழக்க–வழக்கங் கள், வாழ்க்கை–முறை, குடும்ப கட்ட–மைப்பு என்ற ஒவ்வொரு அம்சங்களிலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பேராசிரியர் சண்முக–வேலாயுதம் எழுதிய கொடுக்கூர் அன்றும் இன்றும் தலைப்பிலான நூலை சென்னை வாழ்க வளமுடன் பதிப்பகம் வெளியிட்டது. விழாவுக்கு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் சண் முகசுந்தரம் நூலை அறிமு–கம் செய்து பேசினார். லிங்கத்தடிமேடு வள்ளாலர் கல்வி நிலைய செயலர் கொ.வி.புகழேந்தி, நூலை வெளியிட்டு பேசினார். நூலாசிரியர் முனைவர் க.சண்முகவேலாயுதம் பேசுகையில், ஆரம்பகாலத் தில் புன்செய் நிலங்களாக காணப்பட்ட கொடுக்கூர் கிராமமானது இன்று முந்திரிக் காடுகளாக விருத்தியடைந்த கிராமமாக காட்சியளிக்கின்றது. கொடுக்கூர் இன்றைய நிலை, அன்றைய நிலை, மாற்றங்கள், மாற்றங்களுக்கான காரணிகள், தற்போ–தைய சவால்கள், மேம்படு–வதற்கான வாய்ப்பு–கள், பரிந்துரைகள் என்ற தலைப்புகளில் மாவட்டத்தின் ஒட்டு–மொத்த கிரா–மங்களில் நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தனி நபர் வருமானம், மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது. அரியலூர் மாவட்டம் பிந்தங்கியதற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்திற்கு இம்மா–வட்டம் பயிற்சி களமாக உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து பின்தங்கிய நிலையை ஒழிப்பதற்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் என ஒவ்வொரு துறைக்கும் ஒரு குறிப்பிட்ட உத்தியை மாவட்ட நிர்வாகமும், மாநில நிர்வாகமும் சரியான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு மூலம் வகுக்க வேண்டும் என்றார்.
- அரியலூரில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
- அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை கற்பிற்போம் உள்ளிட்ட பல்வேறுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பணி முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நடைபெறும் பணிகள், முடிவுற்ற பணிகள், பயனாளிகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன், அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தினார்.
இ்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரியலூர்
கயர்லாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன்ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 70) என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முத்துசாமியை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
- மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்று படுகை பகுதியில் இருந்து ஒருவர் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் நோக்கி ெசன்ற மாட்டு வண்டியை தடுத்து சோதனை செய்தனர். இதில், சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீபுரந்தான் கல்லடி தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- லஞ்சம் வாங்குவதை தடுக்க நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா
- விவசாயிகள் கோரிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,விவசாயிகள் குறைகேட்புக்கூ ட்டம் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்ம்பா கூறும்போது, சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் அதிகப்படியாகநெல் கொ ள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்க ளில் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.20 ,40, 50 வரை வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம், மருதை யாறு மற்றும் கல்லாறு ஆற்று நீர்களை ஏரியில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் ஆற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கு வடிக்கால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். யூரியா தடுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி , வரத்து வாய்க்கால் மற்றும் புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். செட்டி ஏரியில் தண்ணீர் வடிவதற்காக ஆறு மாதங்களுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறும்போது, நேரடி கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சுக்கிரன் ஏரியில் நீர் குறைவாக உள்ளதால், பிப்ரவரி மாதம் இறுதிவரை பாசனத்துக்கு தண்ணீர் விட வேண்டும். தா.பழூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெண்ணாற்று தலைப்பில் நிரந்தரமாக தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர், நானாங்கூர், ஆதனூர், ஓரியூர், கோமான் ஆகிய கிராமங்களையும் டெல்டா பாசன பகுதியில் இணைக்க வேண்டும். தொடர்ந்து விவசாயி களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா ளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த வாலிருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார்
அரியலூர்:
ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2016-ம் வருடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டபோது, ஆனந்தராஜ் மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி ஆனந்தராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகி வாதிட்டார்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கீழ நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) என்பவர் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு சொந்தமான பம்பு செட் மோட்டார் கொட்டகையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






