என் மலர்
அரியலூர்
- தா.பழூர் போலீசார் சார்பில் நடந்தது
- போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் தா.பழூர் போலீசார் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமை தாங்கி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்தும், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல், வாங்கி பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விலக்கி பேசினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், (பயிற்சி)பெபின்செல்வபிரிட்டோ உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்."
- காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்
- மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ராசக்கிளி(வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ராசக்கிளி நேற்று முன்தினம் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த காட்டகரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், ராசக்கிளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மீன்சுருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ராசக்கிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்."
- பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
- மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 36). இவருடைய மனைவி சுபா(29). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ், சுபாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி அம்பிகாபதி ஆகியோர் சேர்ந்து சுபாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுபா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சுபா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அம்பிகாபதியை போலீசார் தேடி வருகின்றனர்.
- நிரந்தரப் பணி வழங்க கோரி ஆனந்தவாடி கிராம மக்கள் போராட்டம்
- அரசு சிமெண்ட் ஆலை முன்பு நடந்தது
அரியலூர்,
அரியலூர் கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் 1982 ஆம் ஆண்டு கொடுத்தனர்.அப்போது அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், நிலம் அளித்த விவசாயிகள் குடும்பத்தினர் ஒருவருக்கு சிமென்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.ஆனால் இதுவரை அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை.ஆனால் சிலருக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர பணிக் கேட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வேறு ஒரு மாவட்டத்தில் வசித்து வரும் ஒருவருக்கு நிரந்தரப் பணியை வழங்கியுள்ளது அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம். இதனை கேள்விப்பட்ட ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் , கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது, அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். தற்போது ஒப்பந்த பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.கிராம விவசாயிகளின் கோரிக்கையை அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
- கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
- 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
அரியலூர்,
ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் விஜயகுமார்(வயது33). வாடகைக்கு ரேடியோ செட் கடை வைத்துள்ள இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றம், குற்றவாளி விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகினர்.
- 7 நாட்களுக்குள் மாற்றித்தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- வழக்கு தொடுத்த 12 நாட்களில் உத்தரவு
அரியலூர்,
அரியலூர் நகரில் வசிப்பவர் கிரி மனைவி கற்பகவள்ளி(வயது55). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியபோது வீட்டுக்கு பொருத்துவதற்கு தண்ணீர் குழாய்களையும், அதற்கு தேவைப்படும் இதர பொருள்களையும் ரூ.47,000 செலுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார்.ஆனால், தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்ட 3 மாதத்தில் கசிவு, குழாய் அடைப்பு, பாசி பிடித்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து குழாய்களை விற்பனை செய்தவரிடம் கற்பகவள்ளி புகார் தெரிவித்துள்ளார். இதனை உற்பத்தியாளருக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.ஆனால் பல மாதங்களாகியும் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் பிரச்சினையை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.இதையடுத்து கடந்த மாதம் 14 ஆம் தேதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு உற்பத்தியாளருக்கும், விற்பனையாளருக்கும் ஆணையத்திலிருந்து அறிவிப்பு அனுப்பி கடந்த 12 -ந் தேதி முதல் விசாரணை தொடங்கியது.இதில், கடந்த 24 -ந் தேதி சமரச அறிக்கை மாவட்ட ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினமே குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக (வரைவோலையாக) வழங்கினர்.இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, சமரச அறிக்கையின்படி குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனம், விற்பனை செய்த குழாய்களையும் இதர பொருள்களையும் எடுத்துக்கொண்டு வழக்கு தொடுத்தவருக்கு ஒரு வார காலத்துக்குள் தரமான குழாய்களையும் இதர பொருள்களையும் வழங்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடந்தது
- 289 மனுக்கள் பெறப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 289 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
- பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்களுக்குண்டான பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தூய்மைப் பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு,அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். செயலர் ஷேக்தாவூத் பங்கேற்று பேசினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மேற்கண்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வி.கைகாட்டியில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் காவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையத்தேவன் (வயது 34). இவர் தனது உறவினரான சக்தி தேவனுடன் (20) மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வி.கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் வெள்ளையத்தேவன், சக்தி தேவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரைக்குறிச்சி பட்ட தெருவை சேர்ந்த கார் டிரைவர் கண்ணாயிரத்தை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தா.பழூர் அருகே டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
அரியலூர்:
கடலூர் மாவட்டம் மேல கஞ்சம் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 28), பெயிண்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி அரசு டாஸ்மாக் மதுபான கடை அருேக மயங்கி கிடந்த அருள்பாண்டியனை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அருள்பாண்டியன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயங்கொண்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது
- மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய முன்பு கோட்ட ஊழியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்ட மத்திய மின் ஊழியர்கள் (சிஐடியு) சங்க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில செயலாளர் அகஸ்டின் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்ட பொருளாளர் கண்ணன், கோட்ட செயலாளர் கண்ணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்டிமடத்தை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர்
- இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா, பழனிவேல் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும் ஆண்டிமடம் தாலுக்காவை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
அடித்தட்டு மக்கள் முதல் ஆளுநர் வரை மிரட்டும் போக்குடன் செயல்படும் விசிக கட்சியை தடை செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






