என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிமடத்தை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரிக்கை
    X

    ஆண்டிமடத்தை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரிக்கை

    • ஆண்டிமடத்தை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர்
    • இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா, பழனிவேல் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும் ஆண்டிமடம் தாலுக்காவை மீண்டும் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும்.

    அடித்தட்டு மக்கள் முதல் ஆளுநர் வரை மிரட்டும் போக்குடன் செயல்படும் விசிக கட்சியை தடை செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×