என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட கலெக்டர் தகவல்
- சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
- தகுதியான நிறுவனங்கள் இணைய–தளத்தில் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ் வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப–தாவது:- தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில், சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்துக்கு ஒரு விருது வீதம் 37 நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என அறி–வித்தது. இவ்விருதில் ரூ.1 லட்சம் பரிசு தொகை–யும், நற்சான்றிதழும் வழங்கப் படும். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபடும் தனியார், பொதுத் துறைகளை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனி நபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விரு–தினை பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேர–டியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்து–வமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள், சங்கங்கள் இவ்விருது பெற தகு–தியற்றவை ஆகும். மேற்கண்ட நிறுவனங்க–ளால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி–களே விருது வழங்குவ–தற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.
விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவை–களில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். மேலும், பல்வேறு சமூக நல மேம்பாட்டு பணிகளுக்கு விருது வழங்குவதற்கு பரிசீ–லிக்கப்படும். நிறுவனங்க–ளின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்விருதுக்கு தகுதியான நிறுவனங்கள் இணைய–தளத்தில் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






