என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா
    X

    ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா

    • அரியர் பணத்தை வழங்க கோரி போராட்டம்
    • 15 ஆயிரம் ரூபாய் வழங்கபடவில்லை என குற்றச்சாட்டு

    ஜெயகொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுமார் 140 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறிய நிலையில் இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை, பிடித்தம் செய்யப்பட்டுள்ள அரியர் பணத்தை 50 மாதமாக நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை, தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, சீருடைகளோ வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

    Next Story
    ×