என் மலர்
மேற்கு வங்காளம்
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ் மேற்கு வங்காள கவர்னராக இன்று பதவியேற்கிறார்.
- மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல பதவி வகித்தவர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார்.
மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
- சக்கரவர்த்தியின் 2 கால்கள், தலை, வயிற்றுப்பகுதி மீட்கப்பட்டன.
- போலீசார், தாய்-மகனை கைது செய்தனர்.
கொல்கத்தா
டெல்லியில் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் கடந்த மே மாதம் அந்த வாலிபரால் கொலை செய்யப்பட்டார். பின்னர் ஷ்ரத்தாவின் உடலை அந்த வாலிபர் 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசினார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்காளத்தில் அதைப்போன்ற கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
அங்குள்ள தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பரைப்பூரை சேர்ந்தவர் உஜ்வால் சக்கரவர்த்தி (வயது 55). முன்னாள் கடற்படை வீரரான இவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் உஜ்வால் சக்கரவர்த்தி மாயமானதாக அவரது மனைவியும், மகனும் கடந்த 15-ந் தேதி பரைப்பூர் போலீசில் புகார் செய்தனர். அவர்களிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டபோது இருவரும் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது தந்தையை கொலை செய்ததை அவரது மகன் ஒப்புக்கொண்டார்.
உஜ்வால் சக்கரவர்த்தி தனது மனைவி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மகனை தினமும் சித்ரவதை செய்து வந்துள்ளார். தனது தேர்வுக்காக ரூ.3 ஆயிரம் தருமாறு கடந்த 12-ந் தேதி உஜ்வால் சக்கரவர்த்தியிடம் மகன் கேட்டுள்ளார்.
இதில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே தந்தையை அவரது மகன் திடீரென பிடித்து தள்ளிவிட்டார். இதில் நாற்காலி ஒன்றில் மோதி கீழே விழுந்த உஜ்வால் சக்கரவர்த்தி மயக்கம் அடைந்தார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத மகன் பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். பின்னர் தாயும், மகனுமாக சேர்ந்து உஜ்வால் சக்கரவர்த்தியின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று 6 துண்டுகளாக கூறுபோட்டனர்.
பின்னர் உஜ்வாலின் மகன், தந்தையின் உடல் பாகங்களை வீட்டின் அருகே உள்ள குளம், குப்பை கிடங்கு என ஆங்காங்கே வீசி விட்டு வந்துள்ளார்.
இந்த தகவல்களை போலீஸ் விசாரணையில் தாயும், மகனும் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார், தாய்-மகனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் உஜ்வால் சக்கரவர்த்தியின் உடல் பாகங்களை மீட்பதற்காக அவர்களை அழைத்து சென்றனர்.
நீண்ட தேடுதல் வேட்டையில் உஜ்வால் சக்கரவர்த்தியின் 2 கால்கள், தலை, வயிற்றுப்பகுதி ஆகியவை மீட்கப்பட்டன. கைகள் மற்றும் பிற உடல் பாகங்கள் இன்னும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
முன்னாள் கடற்படை வீரரை மனைவியும், மகனும் இணைந்து கொலை செய்து, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது.
- பிரதமர் மோடியை மம்தா தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கொல்கத்தா :
மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடக்கிறது. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு இந்த சந்திப்பு நடந்தால், மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை, குறிப்பாக 100 நாள் வேலைத்திட்ட நிலுவையை உடனடியாக வழங்க பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் கங்கை நதியரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுப்பார் என்றும் அவர்கள் கூறினர்.
- ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
- அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை
கொல்கத்தா:
நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
- தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இன்று காலை 10.05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது பற்றி விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அந்த விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
விமான நிலையத்துக்கு உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- மந்திரி நிதின் கட்கரியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
- இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
சிலிகுரி:
மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
- நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கூட்டத்தில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தந்து விடும் என்று நினைத்தோம். ஆனால், எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை மத்திய அரசு வழங்கவில்லை.
மாநிலங்களுக்கு பங்கு வழங்க முடியாவிட்டால், ஜி.எஸ்.டி. முறையையே மத்திய அரசு கைவிட்டு விடலாம். இது ஒன்றும் பா.ஜனதா பணம் அல்ல. மக்கள் பணம். அதை ஜி.எஸ்.டி. மூலமாக மத்திய அரசு பறித்துக்கொள்கிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் காலை தொட்டு நான் பணம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாக்கி தொகையை கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்.
மேலும், மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூலை செலுத்துவதை நிறுத்த வேண்டி இருக்கும்.
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிப்பது இல்லை. நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை. நிதி பெறுவதற்கான மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மம்தா பானர்ஜி, அப்பகுதி மக்களுடன் உரையாடினார். மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.
அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், மம்தா பானர்ஜி வடை சுட்டு கொடுத்தார்.
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு திரிணாமுல் கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
இதற்கிடையே, மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரியின் அந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையில் உள்ளது. அது திரிணமுல்லின் கருத்து இல்லை. ஜனாதிபதி மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது என தெரிவித்தது.
- இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
- எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தியா வங்காளதேச எல்லையான மேற்கு வங்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்தனர். அப்போது சிலர் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை ஊர் திரும்பும்படி எல்லை காவல் படையினர் எச்சரித்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் உயர் பீம் டார்ச் லைட்களை அடித்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது அடித்தும், மூங்கில் கம்பு மற்றும் கற்களை வீசியும் தாக்கியும் உள்ளனர்.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
- இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
- குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை பாஜக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது.
நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மேற்கு வங்காளத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது என தெரிவித்தார்.
- கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஈடன் கார்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இமாசல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏகாந்த் சென் 37 ரன்னும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல்முறையாக மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.






