என் மலர்
மேற்கு வங்காளம்
- பிரதமர் மோடி, ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குஜராத்தில் இருந்து அவர் காணொலி காட்சி மூலம் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில் 564 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, "நான் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் என் தாயார் மறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மேற்கு வங்காளத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். ரூ.2,500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கொல்கத்தாவில் நடந்த வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் ஆனந்த போஸ், ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் தேசிய கங்கை கவுன்சிலின் 2வது கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.
- தற்போது மம்தாவுடன் சமரசம் செய்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:
ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மோடியின் தாயாருக்காக, பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதர் தகவல்
- மோடியின் தாயார் விரைவில் நலம் பெற ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
கொல்கத்தா:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் (99) உடல்நலக் குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர்கிலோன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியதுடன் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.
- கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.
- பிரார்த்தனையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
கொல்கத்தா:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.
இந்த பிரார்த்தனையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அங்கு பேராயரிடம் அவர் ஆசி பெற்றார். அவருடன் அவரது மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் சென்றிருந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- டீ கடை உரிமையாளரின் அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் கால்பந்து திருவிழாவை கொண்டாடும் ரசிகர்கள்.
கொல்கத்தா:
கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து ஜூரம் இந்தியாவிலும் தீவிரமாக உள்ளது. கால்பந்து போட்டியை பெரிதும் ரசிக்கும் மேற்கு வங்கம், கோவா மற்றும் கேரளா மாநிலங்களில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீ கடை உரிமையாளர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஆதரிப்பவர்களுக்கு இலவசமாக டீ வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த கடையில் உள்ள இலவச டீ குறித்த அறிவிப்பு கார்டுக்கு அருகே பெண் ஒருவர் புன்னகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.
- போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
- போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களும், பீகார் மற்றும் ஒடிஸா மாநில துணை முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியுள்ளதாவது:

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மண்டலக் கவுன்சில் கூட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் 93 சதவீத விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருப்பது மிகப்பெரிய சாதனை. பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு, தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப் பட்டதே இதற்கு காரணம். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருமித்த ஒத்துழைப்புக்கு , மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்கு மண்டல மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.கிழக்கு மண்டலத்தில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டுள்ளது.
இதனை முற்றிலும் ஒழிக்க தீர்க்கமான வழிமுறைகள் உருவாக்கப்படும். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரித் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் கண்காணிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு நிகரான வளர்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.
போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
- நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
அசன்சோல்:
மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, மற்றொரு முக்கிய தலைவரான ஜிதேந்திர திவாரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
இக்கூட்டத்தில் சுமார் 5000 பேர் திரண்டுள்ளனர். போர்வை வாங்குவதற்காக முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் சந்த்மணி தேபி(55), ஜிகாலி பவுரி (60), பிரித்தி சிங் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி, மத அமைப்பின் கீழ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பாஜக இந்நிகழ்ச்சியை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 3 வாகனங்களில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறினார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வாத்வா (வயது 60). தொழில் அதிபர்.
இவரது வீட்டுக்கு 3 வாகனங்களில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள் அங்கு சோதனை என்ற பெயரில் ரூ.30 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சுரேஷ் வாத்வா பொவானிப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
- மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
- மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மேதினிபூர்:
மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
- மம்தா பானர்ஜிக்கு அருகில் அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு விளக்குகிறார்
- மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார் மம்தா பானர்ஜி
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணம் செய்த படகை அவரே செலுத்தினார். இது தொடர்பான வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், மம்தா பானர்ஜிக்கு அருகில் அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு விளக்குகிறார்.
Hon'ble CM @MamataOfficial paid a unique visit to villages in North 24 Parganas on a boat.
— All India Trinamool Congress (@AITCofficial) November 30, 2022
In a lively mood she was seen steering the vessel herself.
With the wheels of progress and prosperity in her able hands, Bengal strides ahead. pic.twitter.com/paLVWsUymM
இதன்பின்னர், ஹஸ்னாபாத் பள்ளிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார். பின்பு, அந்த பகுதியில் கபுகுர் என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு குளிர்கால ஆடைகளையும் அவர் வழங்கினார்.
- கப்பல் தயாரிப்பு நிறுவனம், ஒரே ஆண்டில் 3வது பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது.
- 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது.
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படைக்காக 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையை சேர்ந்த மனைவியர் நலச் சங்கத் தலைவர் மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பல் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் ஹம்பிஹோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ். இக்சாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும்.
கடந்த 60 ஆண்டுகளில், ஜிஆர்எஸ்இ நிறுவனம் 800க்கும் மேற்பட்ட கப்பல்களை உருவாக்கி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டவை இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, நட்பு நாடுகளான மொரீஷியஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜி-20 உச்சி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடக்கிறது.
- இதில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி 5-ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொல்கத்தா:
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ம் தேதி மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இதில் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க 5-ம் தேதி டெல்லி செல்கிறேன். மேற்கு வங்காள முதல் மந்திரியாக அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பங்கேற்பேன் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுவார் என மாநில அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்து






