என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச டீ"

    • 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
    • மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.

    12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.

    மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.



    • டீ கடை உரிமையாளரின் அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    • மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் கால்பந்து திருவிழாவை கொண்டாடும் ரசிகர்கள்.

    கொல்கத்தா:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து ஜூரம் இந்தியாவிலும் தீவிரமாக உள்ளது. கால்பந்து போட்டியை பெரிதும் ரசிக்கும் மேற்கு வங்கம், கோவா மற்றும் கேரளா மாநிலங்களில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


    இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீ கடை உரிமையாளர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஆதரிப்பவர்களுக்கு இலவசமாக டீ வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த கடையில் உள்ள இலவச டீ குறித்த அறிவிப்பு கார்டுக்கு அருகே பெண் ஒருவர் புன்னகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.

    • சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • டிரைவர்களிடையே தூக்கம், சோர்வு அதிகரிக்கும்போது டீ இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இன்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.

    ×