என் மலர்
மேற்கு வங்காளம்
- வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
- மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தனது உரையின்போது கூறியதாவது:-
மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது
மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 'உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்' (துவாரே சர்க்கார்) திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.
இத்திட்டம் தேசிய விருதை வென்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
- சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரெயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயிலின் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி- காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை- காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5வது சேவையாக சென்னை- பெங்களூரு- மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.இந்நிலையில், சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மேற்கு வங்காள அமைச்சர் உதயன் குஹா கூறியுள்ளார்.
மேலும் அவர், "சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிவேக ரெயிலாக இருந்தால், ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு 8 மணிநேரம் ஆகும். சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம்" என்றார்.
- அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம்.
- அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3 ஆயிரம் கேட்டனர்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார்.
இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது தாயாரை ஜல்பாய்குரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு போய்ச் சேர்த்தார்.
ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார். அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச்செல்வதற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.3 ஆயிரம் கேட்டிருக்கிறார்கள்.
பாவம், அவரிடம் அவ்வளவு பணம் இல்லை.
உடனே அவர் தனது தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி தனது தோளில் வைத்து சுமந்து கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதன் இன்னொரு பகுதியை வயதான அவரது தந்தை சுமந்தவாறு பின்தொடர்ந்தார். இந்த காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது. அத்துடன், சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்று இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து ராம்பிரசாத் தெவன் தாயார் உடலை வீடு கொண்டு போய்ச் சேர்த்துள்ளது.
இதுபற்றி ராம் பிரசாத் தெவன் கூறியதாவது:-
எங்கள் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.900 கொடுத்தோம். ஆனால் அம்மாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.3 ஆயிரம் கேட்டனர். எங்களால் அவ்வளவு பணம்கொக்க வசதி இல்லை.
எனவே அம்மாவின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி என் தோளில் வைத்து சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் வயதான அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.
இது பற்றி அந்த ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டு கல்யாண் கான் கூறுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களுக்கு பிண ஊர்தி ஏற்பாடு செய்து தந்திருக்க முடியும். பாவம், அவர்களுக்கு இதுகுறித்து தெரியாமல் போய் விட்டது. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை" என தெரிவித்தார்.
இலவச ஆம்புலன்ஸ் வசதியை பாதி வழியில் ஏற்படுத்தித்தந்த சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி கூறும்போது, "இது போன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவோரை ஆஸ்பத்திரி அருகே கூட ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் அனுமதிப்பது இல்லை" என வேதனை தெரிவித்தார்.
- தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் பீகார் மக்களுக்கு புகார் இருக்கும். இருப்பினும் பீகாரை அவமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சியில், அவர்களுக்கு இந்த சேவைகளை மறுக்க முடியாது.
வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
சீனாவில் பி.எப். 7 என்ற உருமாறிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும் ஆய்வுத்தகவல்கள் வெளியாகின.
சீனா கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக தகவல்களைத் தரவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது. அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100 சதவீத கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்கவேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பி.எப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.
மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.
- மேற்கு வங்காள மாநிலத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர். அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் நிலைய ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுவேந்து அதிகாரி, 'இந்த ரெயில் தொடக்க விழாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் கல் வீசி தாக்கப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
- ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா-ஜல்பைகுரி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று குமார் கஞ்ச் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கு மறைவான இடத்தில் இருந்த மர்மநபர்கள் அந்த ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள்.
இந்த கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு கும்பலை தேடி வருகின்றனர். இந்த ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களை தொண்டர்கள் பணிவுடன் அணுக வேண்டும்.
- மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப்பார்ப்பது பா.ஜனதாவின் கொள்கை.
கொல்கத்தா :
கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். அதனால் ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்வது அவசியம்.
மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப்பார்ப்பது பா.ஜனதாவின் கொள்கை. கொள்கை அடிப்படையில், பா.ஜனதாவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்கள். ஆனால், இரு கட்சிகள் இடையே ரகசிய உறவு நிலவுகிறது.
மக்களை தொண்டர்கள் பணிவுடன் அணுக வேண்டும். மக்களை சந்தித்து, எதிர்க்கட்சிகளின் பொய் புகார்களை முறியடிக்க வேண்டும். மாநில அரசின் நலத்திட்டங்கள் எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துக்கட்ட கட்சி மட்டத்தில் ஊழல் தடுப்பு முறை அறிமுகப்படுத்தப்படும். பஞ்சாயத்து மட்டத்தில், அனைத்து ஊழல் புகார்களையும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அதை எதிர்கொள்வதற்காக ஒரு பிரசார இயக்கத்தை மம்தா பானர்ஜி தொடங்கிவைத்தார்.
அந்த இயக்கம், 11-ந் தேதி தொடங்கி, 60 நாட்கள் நடைபெறும். 3 லட்சத்து 50 ஆயிரம் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் சுமார் 10 கோடி பேரை சந்தித்து, நலத்திட்டங்களை கிடைக்க செய்வார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
- நமது திறன்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்.
- புதிய விமான நிலையங்கள், சாலைகள் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் தூய்மை கங்கை இயக்கம் தொடர்பான திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
நதிகளை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் கழிவுநீர் கலக்காமல், சுற்றியுள்ள பகுதிகளில் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 8 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் 1,000 கிலோ மீட்டராக அதை அதிகரிக்கும் நோக்குடன் பணிகள் நடைபெறுகின்றன. தேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய சவாலாக இருந்தது.
ஒருங்கிணைப்பு இடைவெளியை நீக்கும் நோக்கத்திலேயே பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் தொடங்கப்பட்டது. புதிய விமான நிலையங்கள், நீர்வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலைகள் போன்றவை பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்கின்றன.
21-ம் நூற்றாண்டில நமது திறன்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும். தற்போது நாட்டில் 100-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நவீனரக பயணக் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகப் பெரிய நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்த நம்பிக்கையை தொடர்ந்து பராமரிக்க ஒவ்வொரு இந்தியரும் தங்கள் முழு பலத்தையும் செலுத்தி உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் துவக்க விழா இன்று நடைபெற்றது.
- அதில் பங்கேற்ற பிரதமரிடம், மம்தா பானர்ஜி தயவுசெய்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
கொல்கத்தா:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்கு நிகழ்வு முடிந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.
அதன்பின், மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று ரெயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என கூறினார்.
மம்தா பானர்ஜியின் பேச்சு பிரதமர் மோடியின் கடமை உணர்வை பாராட்டுவதாகவே இருந்தது.
- பிரதமர் மோடி, ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குஜராத்தில் இருந்து அவர் காணொலி காட்சி மூலம் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில் 564 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, "நான் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் என் தாயார் மறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மேற்கு வங்காளத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். ரூ.2,500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கொல்கத்தாவில் நடந்த வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் ஆனந்த போஸ், ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் தேசிய கங்கை கவுன்சிலின் 2வது கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.






