என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே! - மம்தா பானர்ஜி உருக்கம்
    X

    பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி

    ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே! - மம்தா பானர்ஜி உருக்கம்

    • மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் துவக்க விழா இன்று நடைபெற்றது.
    • அதில் பங்கேற்ற பிரதமரிடம், மம்தா பானர்ஜி தயவுசெய்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்கு நிகழ்வு முடிந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

    அதன்பின், மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று ரெயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    அந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என கூறினார்.

    மம்தா பானர்ஜியின் பேச்சு பிரதமர் மோடியின் கடமை உணர்வை பாராட்டுவதாகவே இருந்தது.

    Next Story
    ×