மும்பை விமானம் அவசரமாக தரை இறக்கம்- 156 பயணிகள் உயிர் தப்பினர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது.தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மும்பை விமானம் அவசரமாக தரை இறக்கம்- 156 பயணிகள் உயிர் தப்பினர்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இன்று காலை 10.05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது பற்றி விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அந்த விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

விமான நிலையத்துக்கு உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com