என் மலர்
உத்தரப் பிரதேசம்
- தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி:
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.
- குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அறிவுறுத்தியது.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து, இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
கலவரத்தின்போது புகானா பகுதியைச் சேர்ந்த 26 வயதான இஸ்லாமிய பெண், 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் 3 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, குழந்தையை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 3 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிகப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிக்கந்தர், குல்தீப், மகேஷ்வீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, விசாரணை நடைபெற்று வரும்போதே குல்தீப் உயிரிழந்துவிட்டான். மற்ற இருவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அறிவுறுத்தியது. இதையடுத்து விசாரணை துரிதமாக நடைபெற்றது. வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கந்தர், மகேஷ்வீர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன், அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
- கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது.
- போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கவுசாம்பி:
உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் (வயது 33) என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் அவரது மாமியார், மருமகளிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், தனது மருமகளின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிவிட்டதாக தெரிகிறது. உடனே இதுகுறித்து சாலி பேகம் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சாலி பேகம், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
- சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள சண்டலி பகுதியை சேர்ந்த சலாலுதீன் என்பவரின் மகன் இர்பான் 82.71 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இதனை இர்பானின் தந்தை சலாலூதின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த தங்களின் மகனுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசை வந்தது. அதுபற்றி மகன் என்னிடம் கூறியபோது, நான் மறுப்பு தெரிவிக்கவில்லை.
அவர் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதித்தேன். அவரும் சமஸ்கிருதத்தை ஆர்வத்துடன் படித்தார். இதனால் இன்று அவர் அந்த தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்துக்கள் மட்டுமே சமஸ்கிருதம் படிக்க வேண்டும், முஸ்லிம்கள் இதனை படிக்ககூடாது என்று நாங்கள் கருதவில்லை. எனவே தான் எங்கள் மகனின் விருப்பத்துக்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை.
எதிர்காலத்தில் அவர் சமஸ்கிருத இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது ஆர்வத்துக்கு நான் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே சமஸ்கிருத தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 20 பேரில் இர்பான் மட்டுமே முஸ்லிம் மாணவர் ஆவார். இதற்காக அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
இந்த சாதனையை படைத்த இர்பான் கூறும்போது, எதிர்காலத்தில் சமஸ்கிருத ஆசிரியராக விரும்புகிறேன். சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன், என்றார்.
- குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர்.
- ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.
பரேலி:
உத்தரபிரதேசம் பரேலி அருகே பிரேம் நகர் பகுதியில் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று உள்ளது. ஓட்டலை அங்கூர் சப்பர்வால் என்பவர் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாலிபர் ரஸ்தோகி, அவரது நண்பர் தசீம்ஷம்சி என்ற இருவரும் ஓட்டலுக்கு வந்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர். உணவு பரிமாறப்பட்டு சாப்பிட்டு முடித்த அவர்கள் சிக்கன் கபாப் ருசியாக இல்லை என்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.
சிக்கன் தயாரித்த சமையல்காரரை கூப்பிடுங்கள் என ஆவேசமாக வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.
அப்போது ஓட்டல் உரிமையாளர் சமையல்காரர் நசீர்அகமதுவை அழைத்து அவர்களிடம் பணத்தை வாங்கி வருமாறு கூறினார். அவர் தகராறு செய்த வாலிபர்களிடம் சென்று சிக்கன் சாப்பிட்டதற்கான பில் தொகை ரூ.120-ஐ கேட்டார்.
ருசியாக சமைக்காத நீ எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கேட்டு நசீர் அகமதை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நெற்றியில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.
ரஸ்தோகிக்கு உத்தி ரபிரசேத்தில் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஸ்தோகியின் தந்தையின் பெயரில் உரிமம் உள்ள துப்பாக்கியை அவர் எடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரஸ்தோகி, தசீம்ஷம்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரஸ்தோகியின் தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நசீர்அகமதுக்கு மனைவி மற்றும் 10 வயதில் பெண் குழந்தை உள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பியர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.
- பிரெஞ்சு தூதரகத்திற்கு பியரின் மரணம் குறித்து தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதசேம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 52ல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் பெர்னார்ட் நிவானன் (66). நொய்டாவில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைமை சமையல்காரராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பியர் நாள் முழுவதும் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் இதனை கவனித்துள்ளார். பியர் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்த நிலையில் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மாற்று சாவியை கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். பியர் வீட்டின் படுக்கையறையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டு உரிமையாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பியர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.
மேலும், பியரின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவு புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நடப்பு ஐபிஎல் தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது.
- டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
லக்னோ:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி. இவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து டோனி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டாசின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல்...மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? என டோனியிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த டோனி, இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்... ஆனால், நான் முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.
உடனடியாக டேனி மோரிசன் டோனியைப் பார்த்து, நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பீர்கள் எனக்கு தெரியும் என்றார்.
அதன்பின் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், டோனி மீண்டும் வருவார்.. டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார் என கூறினார்.
- சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
- லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தீக்ஷனா அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா, ஆகாஷ் சிங்.
லக்னோ: கைல் மேயர்ஸ், மனன் வோரா அல்லது பிரேராக் மன்கட், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், அமித் மிஸ்ரா, அவேஷ்கான் அல்லது யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் அல்லது மார்க்வுட்.
- 3 பாடங்களின் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் விடைத்தாள்களை மறு மதிப்பீடுக்கு உட்படுத்துவேன் என்றார்.
- ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க நான் உதவ முடியும் என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 263 மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா தனது 55வது வயதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர், இந்தியில் 57, குடிமைப் பிரிவில் 47, கல்வியில் 42, வரைதல் வடிவமைப்பில் 36, சமூகவியலில் 81 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உ.பி., சட்டசபையில் பரேலி மாவட்டத்தின் பித்ரி- செயின்பூர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரா, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து சட்டத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 12ம் வகுப்பு தேர்வில் தான் பெற்ற மதிப்பெண்களில் 3 பாடங்களின் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் விடைத்தாள்களை மறு மதிப்பீடுக்கு உட்படுத்துவேன் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார்.
மேலும் அவர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் 10ம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இப்போது நான் 12ம் வகுப்பு தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அடுத்ததாக எல்எல்பி (சட்டம்) படிக்க விரும்புகிறேன். இதனால் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க நான் உதவ முடியும்.
நல்ல வழக்கறிஞரின் சேவையைப் பெற முடியாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை நான் எம்எல்ஏவாக இருந்தபோது உணர்ந்தேன்" என்று மிஸ்ரா கூறினார்.
- உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை:
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
இவரது ஆட்சியில் கடந்த 6 வருடங்களாக உ.பி.யில் ரவுடிகளை ஒழிப்பதற்கு என்கவுண்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி இதுவரை 183 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பிரபல தாதா ஆதித்யா அகமது சகோதரர் அஷ்ரப் அகமது என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசின் அவசரகால நம்பரான 112 என்ற எண்ணில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தொடர்பு எண்ணை ஆராய்ந்தபோது மிரட்டல் விடுத்தவர் பெயர் ரீகன் என்பதும் முகப்பில் அல்லா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- முதலில் ஆடிய குஜராத் 135 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய லக்னோ 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ:
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 66 ரன்கள் எடுத்தார். விரித்திமான் சகா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், கைல் மேயர்ஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் அரை சதமடித்தார். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 23 ரன்னில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 68 ரன்னில் அவுட்டானார்.
கடைசி ஓவரில் மோகித் 2 விக்கெட் வீழ்த்தினார். 2 பேர் ரன் அவுட் ஆகினர்.
இறுதியில், லக்னோ அணி 128 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய குஜராத் 135 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 66 ரன்கள் எடுத்தார்.
லக்னோ:
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விரித்திமான் சகா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 50 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.






