என் மலர்
உத்தரப் பிரதேசம்
- ஆய்வுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவு
- அலகாபாத் உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
அதன்படி இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக கேட்டுக்கொண்டது.
இதனால் மசூதி சார்பில் அலகாபாத்தில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மசூதி நிர்வாகம் அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து பெண்கள் வழிபாடு செய்ய வேண்டுகோள் விடுத்த நிலையில், தங்களால் அதை பராமரிக்க முடியாது என மசூதி சார்பில் தெரிவித்த தகவலை வாரணாசி நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது.
- கடந்த மாதம் 24-ந்தேதி உச்சநீதிமன்றம் ஆய்வு நடத்த தடைவிதித்தது
- அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மசூதி நிர்வாகத்திற்கு உத்தரவு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக கேட்டுக்கொண்டது.
இதனால் மசூதி சார்பில் அலகாபாத்தில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மசூதி நிர்வாகம் அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து பெண்கள் வழிபாடு செய்ய வேண்டுகோள் விடுத்த நிலையில், தங்களால் அதை பராமரிக்க முடியாது என மசூதி சார்பில் தெரிவித்த தகவலை வாரணாசி நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது.
- முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.
- குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள்.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநில வளர்ச்சி பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை. அரசு சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்தவர்களுக்கு நான் ஆரத்தியா எடுக்க முடியும்? குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்படுகிறது என்றார்.
- கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் புத்த மடாலயங்கள் இருந்தன
- கோவில்களில் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?
வாரணாசி மற்றும் மதுராவில் மசூதிக்குள் கோவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கூறியதாவது:-
உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்கள், புரியில் உள்ள ஜெகநாத் கோவில், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில், மகாராஷ்டிரா பந்தர்புரில் உள்ள விதோபா கோவில் ஆகியவற்றில் புத்த மடாலயங்கள் இருந்தன. இந்த புத்த மடாலயங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடங்களில் இந்து கோவில்கள் உருவாகின. அங்கு 8-ம் நூற்றாண்டு வரை புத்த மடாலயங்கள் இருந்தன.
என்னுடைய நோக்கம் கோவில்கள் புத்த மடாலயங்கள் ஆக வேண்டும் என்பது அல்ல. ஆனால், நீங்கள் ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் ஒவ்வொரு கோவில்களிலும் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?'' எனக் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் புபேந்திர சிங் சவுத்ரி, ''சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மீண்டும் மீண்டும் சனாதன தர்மம் அவமதிக்கப்பப்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் புனித தலமாக கேதர்நாத், பத்ரிநாத், ஜெகநாத் புரி விளங்குகிறது. இது சர்ச்சைக்குரிய கருத்து மட்டுமல்ல. இது அவரின் அற்பமான மனநிலை மற்றும் அரசியலையும காட்டுகிறது.
இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது. சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. மயூரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சமாஜ்வாடி கட்சி இதை ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து அகிலேஷ் யாதவ் கருத்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.
- தாரிக் மன்சூர் உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 15 முதல் 20 தொகுதிகளில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முஸ்லிம்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர், பாஜக துணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்த முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் போதனைகளை பரப்பும் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்.
பாஜக தனது சிறுபான்மை பிரிவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினரின் ஆதரவை பெற்று வருகிறது. குறிப்பாக பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குச் சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மறுநாள், பாஜக துணைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாரிக் மன்சூர் உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாஜகவால் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது முஸ்லிம் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாரிக் மன்சூர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் வாக்காளர்களில் சுமார் 19% அங்கு உள்ளனர். மேலும் சுமார் 30 மக்களவைத் தொகுதிகளில் கணிசமான அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். அவற்றில் 15 முதல் 20 தொகுதிகளில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
தாரா ஷிகோ திட்டத்தில் மன்சூரின் பங்களிப்பு ஆர்எஸ்எஸ் தலைமையை வெகுவாக கவர்ந்ததாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பாரசீகத் துறையை திறம்பட பயன்படுத்தி, மதங்களுக்கு இடையிலான உரையாடலில் ஷிகோவின் பெரும்பாலான படைப்புகளை மொழிபெயர்த்து, முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு சிறந்த தலைவராக முன்னிறுத்தினார். அது பற்றிய கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்தினார் எனவும் அந்த நிர்வாகி கூறினார்.
தாரிக் மன்சூர் நியமனம் குறித்து பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், 'மன்சூர் ஒரு தேசியவாத முஸ்லிம். அவர் எப்போதும் தேசம்தான் முதலில் என்ற இலட்சியத்தை ஊக்குவித்து வருகிறார். அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களை சரியான பாதையில் அழைத்துச் சென்று, அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுத்தார். அவரது நியமனம் கட்சியை விரிவுபடுத்த உதவும்' என்றார்.
- ஆசியாவைச் சேர்ந்த 18 நாடுகளைச் சேர்ந்த 220 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் டெலோஸ் சாண்டோஸ், பிலிப்பைன்ஸின் போரஸ் எரோன் ஆகியோருக்கு பதக்கம்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த 18 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் 220 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, இன்று நடைபெற்ற ஆசிய இளைஞர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் ஜூனியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சபர் ஜாய்ஷ்னா 40 கிலோ பெண்கள் இளையோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் டெலோஸ் சாண்டோஸ், பிலிப்பைன்ஸின் போரஸ் எரோன் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க், மொத்த எடைப் பிரிவு என மூன்று பிரிவுகளில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- 2 வாலிபர்கள் குட்டிக்குரங்கை கம்பால் சரமாரியாக தாக்கினார்கள்.
- வாயில்லா ஜீவன் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் வலி தாங்க முடியாமல் அலறியது.
விலங்குகளிடம் பரிவு காட்டும் மனிதாபிமான மனிதர்கள் மத்தியில் ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு குரங்கு குட்டியை 2 வாலிபர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பவுதான் மாவட்டம் தாவ்ரி கிராமத்திற்குள் ஒரு குரங்குகுட்டி வழி தவறி வந்தது. இதை பார்த்த 2 வாலிபர்கள் அந்த குட்டிக்குரங்கை கம்பால் சரமாரியாக தாக்கினார்கள். வாயில்லா அந்த ஜீவன் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் வலி தாங்க முடியாமல் அலறியது. அது கதறி துடிப்பதை பார்த்தும் அந்த வாலிபர்களின் மனம் இளகவில்லை.
2 பேரில் ஒருவர் தொடர்ந்து அந்த குட்டிக்குரங்கை கம்பால் அடித்து சித்ரவதை செய்து கொண்டே இருந்தார். அடி தாங்க முடியாமல் அந்த குட்டிக்குரங்கு அப்படியே மயங்கியது. இருந்தபோதிலும் அந்த வாலிபர் விடவில்லை. குரங்கு குட்டியை ரோட்டில் அங்கும், இங்கும் தூக்கி போட்டபடி வந்தார். பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த குப்பை கிடங்கிற்கு அந்த குட்டிக்குரங்கை கொண்டு சென்று அங்குள்ள சாக்கடை நீரில் தூக்கி வீசினார்கள். மனிதாபிமானம் இல்லாமல் நடந்த இந்த கொடூர தாக்குதலில் அந்த குட்டிக்குரங்கு பரிதாபமாக உயிரை விட்டது. இதோடு மட்டும் அந்த வாலிபர்கள் நின்று விடவில்லை. இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது வைரலாக பரவியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் அந்த 2 வாலிபர்கள் மீதும் பிராணிகள் வரை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.
- இடைக்கால தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை வரை நீட்டித்தது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்துக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 24ம் தேதி தொல்லியல் துறையை சேர்ந்த 30 பேர் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்கள். ஆனால், இந்த ஆய்வுக்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு 26ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.
இந்த தடை உத்தரவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு நடத்தும் முறை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்ததுடன், விசாரணை நாளையும் தொடரும் என தெரிவித்தனர். அத்துடன், ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நாளை வரை நீட்டித்தனர்.
மேலும், தற்போதுள்ள மசூதிக்கு சேதம் விளைவிக்காமல் எப்படி ஆய்வு நடத்துவது என்பது குறித்த விவரங்களை வழங்கும்படி தொல்லியல் துறையிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
இன்றைய விசாரணையின் போது, 1000 ஆண்டுகள் பழமையான மசூதி கட்டிடத்திற்கு கீழே உள்ள நிலத்தை தோண்டினால் இடிந்து விழும் அபாயம் உள்ளது என மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பிரியாணி கடைக்குள் எலி அடிக்கடி புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வந்துள்ளது.
- சிறிய உயிர்களிடத்தில் கூட இரக்கம் காட்டாத வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பயனர்கள் பலரும் பதிவிட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரை சேர்ந்தவர் சைனுல். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் எலி அடிக்கடி புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த சைனுல் அந்த எலியை பிடித்து தனது மோட்டார் சைக்கிளுக்கு அடியில் வைத்து கொடூரமாக நசுக்கி கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த வீடியோ வைரலாக பரவியது. அதனை பார்த்த பயனர்கள் பலரும் சிறிய உயிர்களிடத்தில் கூட இரக்கம் காட்டாத அந்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. என பெயர் வைத்துள்ள நிலையில் பா.ஜக-வினர் விமர்சனம்
- உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இந்தியா எனப் பெயர் வைத்துள்ளதற்கு விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரே இந்தியா என பெயர் வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
நேற்று பிரதமர் மோடி கிழக்கு இந்திய கம்பெனிகள், இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்டவைகளிலும் இந்தியா உள்ளது. நாட்டின் பெயரை வைத்து மக்களை திசைதிருப்பி ஏமாற்றிவிட முடியாது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கிண்டல் செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைத்துள்ள இந்தியா பெயர் குறித்து கூறுகையில் ''காகம் தனக்குத்தானே அன்னம் என பெயர் வைத்துக் கொண்டாலும், அதனால் முத்தை எடுக்க முடியாது. அமாவாசை பவுர்ணமி என பெயர் மாற்றப்பட்டாலும், அது முழுமையான வெளிச்சத்தை கொடுக்க முடியாது. அதேபோல்தான், பெயரை மாற்றினாலும், பிளவுபடுத்தும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பார்வை முடிவுக்கு வராது.'' என்றார்
மேலும், உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த கார்கள், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஹிண்டன் ஆற்றில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சுதியானா கிராமத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் மூழ்கி உள்ளன. காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த கார்களை வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா, அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு.
- எனது மருமகன் மிகவும் எளிமையான நபர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற வாலிபருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அஞ்சு குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று விட்டார்.
இதனால் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்திருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என கூறியுள்ளார்.
இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்பது எனக்கு தெரியாது.
அஞ்சு 3 வயதில் இருந்தே உத்தரபிரேதசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவரது தாய்மாமாவுடன்தான் தங்கி இருந்தார். அவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தார்.
எனவே நான் அவளை கண்டுகொள்வது கிடையாது. அதன் பின்னர் அஞ்சுவுக்கு திருமணம் நடந்ததை அறிந்தேன். எனது மருமகன் மிகவும் எளிமையான நபர். ஆனால் அஞ்சு விசித்திரமானவள். அவள் மன உளைச்சலில் இருக்கிறாள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






