என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாங்கே பிஹாரி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தடைந்தனர்.
    • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவனத்தில் பாங்கே பிஹாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்னே பிஹாரி ஜி கோவில் அருகில் உள்ள விருந்தாவன் கோட்வாலி பகுதி உள்ளது. இங்கு விஷ்ணு சர்மா என்பவரது பழைய வீடு உள்ளது. 2 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் மேல் பகுதி மிகவும் சிதிலமடைந்திருந்தது. அங்கு சில குரங்குகள் தங்களுக்குள் சண்டையிட்டன. இதனால் அதிர்வு தாங்காமல் வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது.

    இதில் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது கட்டிடத்தின் மற்றொரு சுவரும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கான்பூரைச் சேர்ந்த கீதா காஷ்யப் (வயது 50), அரவிந்த் குமார் யாதவ் (35), ரஷ்மி குப்தா (52), விருந்தாவனத்தைச் சேர்ந்த அஞ்சு முர்கன் (51), தியோரி யாவைச் சேர்ந்த சந்தன் ராய் (28) ஆகிய 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர்.

    6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபப்ட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாங்கே பிஹாரி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தடைந்தனர். 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் நின்றனர். அதிரிஷ்டவசமாக அப்போது விபத்து நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    5 பேர் பலியான இந்த சம்பவத்துக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார். விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • பொதுவாக ரெயில் செல்லும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தில் மாற்றங்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்படும்.
    • ஒரு பயனர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரெயிலை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.

    லக்னோ:

    இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சாலை போக்குவரத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கருதும் நகரவாசிகள் தங்கள் பயணத்திற்கு ரெயில் போக்குவரத்தை தேர்ந்தெடுப்பது உண்டு.

    ஆனால் உத்தரபிரதேசத்தில் சாலை போக்குவரத்தில் ஏற்பட்ட நெரிசலால், ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பொதுவாக ரெயில் செல்லும் போது அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தில் மாற்றங்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்படும். அதன்படி ரெயில் செல்லும் போது அருகே உள்ள சாலைகளில் வாகனங்கள் ரெயில் செல்லும் வரை நிறுத்தப்படும்.

    ஆனால் வாரணாசியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலில் சிக்கி நிற்கும் ரெயில், ஹாரன் எழுப்பியபடி இருந்தது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    அதில் ஒரு பயனர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரெயிலை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.

    • ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது.
    • ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள்.

    லக்னோ:

    பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

    சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்களை பெற்றதால் ஒரு பெண் அவளது கணவராலே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் வந்தன. மேலும் அவருக்கு பாலோவர்கள் அதிகமானோர் உருவானார்கள். இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார்.

    இது ராகுலுக்கு தெரியவந்தது. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பாலோவர்களில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு இனோவா காரில் சென்றார்.

    பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்பு குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற போலீஸ் ரோந்து குழுவினர் அவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள். இதையடுத்து போலீசார் ராகுலை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட பொறாமையிலும், பாலோவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாலும் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து ராகுல் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கொலை செய்யப்பட்ட அனுஜ்சவுத்ரி பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா அமைப்பில் இருந்தார்.
    • கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மொரதாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியை சேர்ந்தவர் அனுஜ் சவுத்ரி(வயது 34). பா.ஜ.க. நிர்வாகியான இவர் டெல்லி சாலையில் அமைந்து உள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    இன்று காலை இவர் சகோதரர் புனிதத்துடன் வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அனுஜ் சவுத்ரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அனுஜ்சவுத்ரியின் தலை மற்றும் தோள் பட்டையில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    இதை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். சத்தம் கேட்டு அங்கு வந்த அனுஜ் சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. ஹேம்ராஜ் மீனா உட்பட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்து கண்காணிப்பு கேமிரக்களில் அனுஜ்சவுத்ரியை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் உருவம் பதிவாகி இருந்தது. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட அனுஜ்சவுத்ரி பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா அமைப்பில் இருந்தார். பா.ஜ.க.வின் மேலிட தலைவர்கள் மற்றும் மந்திரிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலை செய்யப்பட்ட அனுஜ் சவுத்ரி 2021-ம் ஆண்டு சம்பல் மாவட்டத்தில் உள்ள அஸ்மோலி தொகுதியில் தொகுதி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    மேலும் சமீபத்தில், தற்போது உள்ள தொகுதித் தலைவருக்கு எதிராக அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். இது தொடர்பான முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
    • மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

    லக்னோ:

    2019 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இதில் வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்றார்.

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை யால் ராகுல்காந்தியின் வயநாடு எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார். 137 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர் நேற்று பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் விரும்புகிறது.

    அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

    2024 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வலியுறுத்துவதற்காக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் குழு டெல்லி செல்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு அவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கடைசியாக நடந்த 4 பாராளுமன்ற தேர்தலில் அமேதியில் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதேபோல உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றார்.

    அமேதி தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி- இராணி அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அமேதியில் முகாமிட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் அவர் தனது தொகுதிக்கு 50 முறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
    • சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது

    இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.

    இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.

    சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது.  புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.

    சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

    • வாரணாசி ஞானவாபி மசூதியில தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவியல்பூர்வ ஆய்வு
    • நீதிமன்றத்தின் அனுமதி அடிப்படையில் இன்று 6-வது நாளாக ஆய்வு

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை, அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்ள அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 6-வது நாள் ஆய்வு தொடர்கிறது. இதற்கான அதிகாரிகள் ஞானவாபி மசூதி வந்துள்ளனர். அவர்கள் 9 மணியளவில தங்களது 6-வது நாள் ஆய்வை தொடங்க இருக்கிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.

    • ஆப் மூலம் சாட் செய்து ஆசையை தூண்டுதல்
    • சாட் செய்பவர்களுடன் உடலுறவு வைத்து அதை வீடியோ எடுத்தல்

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப்-ல் போலி ஐடி உருவாக்கி, நட்பு அடிப்படையில சாட் செய்வார்கள். பின்னர், தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக்கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்வார்கள். அப்படி வரும்போது, அவர்ளுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதை மற்றொருவர் மூலம் வீடியோ எடுத்துக் கொள்வார்கள்.

    உடலுறவு முடிந்ததும், அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்து பணம் பறித்துக்கொள்வார்கள்.

    இதனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீசார் புகார் அளிக்க, அதன்அடிப்படையில் போலீசார் இந்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. போலீசார் விசாரணையில் மேற்கொண்ட விசயங்கள் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் ஐநது செல்போன்கள், லேப்டாப், 9 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    • ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோரக்பூர்:

    கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. உத்தரபிரதேச மாநிலம் பரபாங்கி சாதாபாத் ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரெனெ ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்?என்று தெரியவில்லை.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
    • பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

    • அலகாபாத் உயர்நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி
    • நேற்று ஐந்து மணி நேரம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

    ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள, அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல்துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்கு காலை 8 மணி மணியளவில் வந்தனர். அவர்கள் 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். மதியம் வரை தொடர்ந்து ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர் கூறும்போது ''தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்கான ஞானவாபி மசூதிக்கு வந்துள்ளனர். 9 மணிக்கு ஆய்வு தொடங்கும். இது 2-வது நாள் ஆய்வு. இந்த ஆய்வு முடியும் வரை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். அதிகாரிகள் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வந்துள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். விரைவில இந்த விவகாரத்தை தீர்க்க விரும்புகிறோம். எல்லாவற்றையும் இந்த ஆய்வு தெளிவுப்படுத்தும்'' என்றார்.

    உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று ஆய்வுக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறி இருந்தனர்.
    • ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யக்கூடாது என்று மசூதி நிர்வாகம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதையடுத்து அந்த மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட கோர்ட்டும், அலகாபாத் ஐகோர்ட்டும் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

    அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஞானவாபி மசூதியில் தொல்லியில் துறையினர் அறிவியல் பூர்வ ஆய்வு தொடங்கினார்கள். 41 பேர் கொண்ட அதிகாரிகள் குழு 2 பிரிவாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

    ஏற்கனவே ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறி இருந்தனர். லிங்கம் உள்ள அந்த பகுதி மூடி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் இன்று தொல்லியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டனர்.

    வாரணாசி கமிஷனர் அசோக்முத்தா, மாஜிஸ்திரேட்டு ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு பணிகள் நடந்தன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. துணைநிலை ராணுவத்தினர் மசூதி முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மசூதி நிர்வாக பிரதிநிதிகள் முன்பு ஆய்வு பணிகள் நடந்தன. ஆனால் இஸ்லாமிய கமிட்டி உறுப்பினர்கள் இந்த ஆய்வு பணியை புறக்கணித்தனர். மதியம் 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யக்கூடாது என்று மசூதி நிர்வாகம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.

    ×