search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபி மசூதியில் 6-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு
    X

    ஞானவாபி மசூதியில் 6-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு

    • வாரணாசி ஞானவாபி மசூதியில தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவியல்பூர்வ ஆய்வு
    • நீதிமன்றத்தின் அனுமதி அடிப்படையில் இன்று 6-வது நாளாக ஆய்வு

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை, அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்ள அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 6-வது நாள் ஆய்வு தொடர்கிறது. இதற்கான அதிகாரிகள் ஞானவாபி மசூதி வந்துள்ளனர். அவர்கள் 9 மணியளவில தங்களது 6-வது நாள் ஆய்வை தொடங்க இருக்கிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.

    Next Story
    ×