என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
- பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
லக்னோ:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுயில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் கொண்ட உத்தரபிர தேசத்தின் உள்கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி வியக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி மாற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதி ஏற்கனவே சொர்க்கலோகம் போல் மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைக்கப்பட்டது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார்.

மேலும், கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரெயில்கள், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் ரெயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.
- ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016, மே மாதம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.
லக்னோ:
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.
இதற்கிடையே, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, 10வது கோடி பயனாளியான மீரா என்ற பெண்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது வீட்டில் டீ குடித்தார். வெளியே நின்றிருந்த மக்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.
- பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி சென்றடைந்தார்.
- பிரதமரை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறமும் பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
லக்னோ:
அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி தனது நேரடி மேற்பார்வையில் மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அதுபோன்று அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அழகு படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை பார்வையிட்டு தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்திக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த 2 இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 கி.மீ. ஆகும். இந்த 15 கி.மீ. தொலைவிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
அந்த 15 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இன்று பகல் 11 மணிக்கு இந்த ரோடு ஷோவை தொடங்கினார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் 15 கி.மீ. தொலைவுக்கும் சாலையின் இருபுறமும் மலர் அலங்காரங்களுடன் பிரமாண்டமான மோடி கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சாலையின் இரு புறமும் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. 'புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி படம் பொறித்த பிர மாண்டமான பேனர்களும் 15 கி.மீ. தொலைவுக்கு நிறைந்திருந்தன.
பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திய 15 கி.மீ. தொலைவுக்கும் சுமார் 1.5 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி மீது மலர்களை அள்ளி தூவி கோஷம் எழுப்பி அயோத்திக்கு வருக வருக என்று வரவேற்றனர். மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் 40 இடங்களில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சுமார் 2 ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றபடி பிரதமர் மோடி வாகனம் புதிய ரெயில் நிலையத்துக்கு சென்று அடைந்தது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார். அதன்பின் அங்கு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
- ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.
பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.
நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.
மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறுகிறது.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்.
ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார்.
இந்நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அயோத்யா தாம் ரெயில் நிலையம் உலகத்தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தின் இரு புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
- மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை அயோத்தி வருகிறார்.
பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தையும், மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமான நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் ராம் பாத் வரை அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 40 மேடைகளில் 1,400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளனர்.
இதில், அயோத்தியைச் சேர்ந்த வைபவ் மிஸ்ரா, காசியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா டமாரம் அடித்து, சங்கு ஊதி பிரதமரை வரவேற்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
- ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.
ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.
ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.
ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.
ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.
ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.
ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- 4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.
- எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் முன்னிலையில் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டனர்.
WWE மல்யுத்தம் போட்டியை பார்த்தீர்கள் என்றால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வார்கள். பின்னர் சேர், பெஞ்ச் போன்றவற்றால் தாக்கிக் கொள்வார்கள். அதுபோன்ற சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உள்ளது.
4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடத்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சி சேர்மன் மற்றும் எம்.எல்.ஏ. பிரசான் சவுத்ரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென் அங்கிருந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் ஒரு கட்டத்தில கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒரவர் சேர்களை கொண்டு தாக்க தொடங்கினர். ஒருவர் சேர் மீது ஏறி மற்றொருவரை தாக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோவை உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பா.ஜனதாவை கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
"இந்த நிகழ்வு மாநில உள்ளூர் நிர்வாகத்தை பற்றி மட்டும் கேள்வி எழுப்பவில்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் உள்ள பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.
எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படாத நிலையில், ஆய்வுக் கூட்டத்தில் வேறு என்ன நடந்திருக்கும். அதனால்தான் ஷாம்லியில் உள்ள கவுன்சிலர்களிடையே அடிதடி நடைபெற்றுள்ளது. பா.ஜனதா ஆட்சி கற்பிப்பது சொந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டு ஆய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்பதுதான்" என்றார்.
- கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- உ.பி.யில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரியாக ஜோதி ராதித்யா சிந்தியா கூறியதாவது:-
உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னதாக 6 விமான நிலையங்கள் இருந்தது. தற்போது 9 விமான நிலையங்கள் உள்ளன. நாளை 10-வது விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு மேலும் 9 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் 19 விமான நிலையங்களாக உயரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜாம்கார், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி, சத்ரகூட் ஆகிய இடங்களில் தலா என்று என ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2030-க்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200-ஐத் தொடும்.
இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையல், நாளை சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்த வைக்க இருக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் எனப் பெயரிடப்பட இருக்கிறது.
- அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.
- டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
- உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
லக்னோ:
வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
- உ.பி.யின் அயோத்தி ரெயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
- ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

வெயிலால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார். விமான நிலையம் அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார் என அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள் தெரிவித்தார்.






