என் மலர்
நீங்கள் தேடியது "PM Ujjwala Yojana"
- ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016, மே மாதம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.
லக்னோ:
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.
இதற்கிடையே, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, 10வது கோடி பயனாளியான மீரா என்ற பெண்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது வீட்டில் டீ குடித்தார். வெளியே நின்றிருந்த மக்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.
- ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் 10-வது கோடி பயனாளி உத்தர பிரதேசத்தின் மீரா மஞ்சி ஆவார்.
புதுடெல்லி:
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.

இதற்கிடையே, உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, 10-வது கோடி பயனாளியான மீரா மஞ்சி என்ற பெண்மணி வீட்டுக்குச் சென்று, டீ குடித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியான மீரா மஞ்சிக்கு பிரதமர் மோடி பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவரது குடும்பத்துக்கு பரிசுகளும் அனுப்பி வைத்துள்ளார்.






