என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் கண்ணாமூச்சி காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெங்கல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காரைக்கால், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளில் பரலாவக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 

    • சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.
    • புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    ஃ பெங்கல் புயல்இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

    மேலும் ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (30.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஃபெங்கல் புயல் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளது. 

    • அமரன் படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார் .
    • இதுதொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    சென்னை:

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், அமரன் படக்குழுவினர் தலைநகர் டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • நள்ளிரவில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    சென்னை:

    தமிழகத்தில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இது இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெங்கல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

    நள்ளிரவு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
    • நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக மாறியது. இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் கரையை கடப்பதை ஒட்டி தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஃபெங்கல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். இதோடு மணிக்கு 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளை (நவம்பர் 20) பிற்பகல் ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

    புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
    • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
    • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    விழாவையொட்டி குடியரசு தலைவர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
    • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கையால், சென்னை அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரெயில் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    கனமழை பெய்யும்போது மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, மெட்ரோ ரெயில் பார்க்கிங்கில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
    • தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன. தொடர்ந்து பெய்த வரும் மழையினால் 61 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 7 ஏரிகளும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
    • புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது. இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் ஃபெங்கல் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    புயல், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதன்படி, டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகள், மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மின்சேவை, மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

    • 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
    • புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    அதன்படி, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிப்பது 3ம் எண் கூண்டு ஆகும்.

    நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.ப்பட்டுள்ளது. 

    துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிப்பது 5ம் எண் கூண்டு ஆகும்.

    சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பைத தெரிவிப்பது 6ம் எண் கூண்டு ஆகும்.

    கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிப்பது 7ம் எண் புயல் கூண்டு ஆகும்.

    ×