61 ஏரிகள் முழுவதும் நிரம்பின

கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.
61 ஏரிகள் முழுவதும் நிரம்பின
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன. தொடர்ந்து பெய்த வரும் மழையினால் 61 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 7 ஏரிகளும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் நிரம்பி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com