என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
- சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனிடையே, ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகளுக்கும் இன்று விடுமுறை என்று மெட்ரோஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280
28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840
26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-11-2024- ஒரு கிராம் ரூ. 100
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
27-11-2024- ஒரு கிராம் ரூ. 98
26-11-2024- ஒரு கிராம் ரூ. 98
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) 19 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல கொல்கத்தா, ஐதராபாத், புவனேஸ்வா், புனே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மங்களூருவில் இருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை வரை கனமழை பெய்யும்.
- கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் மாலை அல்லது இரவு முதல் வீசும்.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை வரை கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் மாலை அல்லது இரவு முதல் வீசும் என கூறியுள்ளார்.
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. நள்ளிரவில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 12 கி.மீ' வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 11 குழுக்கள் தயாராக உள்ளனர். துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் தலா 30 வீரர்களை கொண்ட 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்துள்ளனர்.
- மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன் அதி கனமழையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலும் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும். கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனை பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் உதவி இருந்தால் – 1860 425 1515, மகளிர் உதவி எண் - 1553706 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பலத்த காற்றினால் அசோக் பில்லர் பிரதான சாலையில் விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது.
- 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
- ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையை கடக்க தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
வங்கக்கடலில் கண்ணாமூச்சி காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில்,
புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையை கடக்க தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
- இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
- சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- கடந்த ஆண்டு மழை பெய்த போது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிகையை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெங்கல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மழை பெய்த போது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிகையை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர்.
- சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து வருகின்றன.
- சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக துபாய், புனே, குவைத், மஸ்கட், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து வருகின்றன.
மேலும், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






