என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மின் கம்பி விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையிலான புறநகர் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும். ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    2-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தரைக்காற்று எச்சரிக்கை:

    இன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.

    மண்டபம்:

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு குறிப்பாக 7 மாவட்டங்களில் இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடந்த 4 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.

    இதில் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    பாம்பன் தெற்குவாடி, லைட்ஹவுஸ் தெரு கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகள், அலைகளால் மோசமாக சேதமாகியது.

    வங்கக் கடலில் உருவான புயலால் நேற்று மதியம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 24-ந்தேதி முதல் ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர். அந்தத் தடை இன்றுவரை நீடித்து வருகிறது. இன்று புயல் கரையை கடக்கும் பட்சத்தில் நாளை மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு பகுதியில் மீனவர்கள் கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரம், பாம்பன் மண்டபம் பகுதியில் சுமார் 1,600 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    பெஞ்சல் புயல் எதிரொலியாக கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செல்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.

    இந்த நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாகனங்கள் பழுதானால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக, கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

    தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையிலான புறநகர் ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 12.15 மணி முதல் பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்சை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
    • தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டில் இருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ந் தேதி "உலக எய்ட்ஸ் தினமாக" அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் "Take the Rights Path", அதாவது, "உரிமைப் பாதையில்" என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்சை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.

    தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எச்.ஐ.வி தடுப்புப் பணியினை திறம்பட செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டில் இருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பேத்கர் புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
    • வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் நூல் உருவாக்கவுரை ஆற்றுகிறார்.

    டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.

    சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் அம்பேத்கரின் பேரனும், தீவிர இடதுசாரி சிந்தனைகொண்ட சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் புத்தக்கத்தை பெற்றுக்கொள்கிறார்.

    இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்குகிறார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா நூல் உருவாக்கவுரை ஆற்றுகிறார். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் நன்றியுரை ஆற்றுகிறார்.

    விசிகவின் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் வெளியிடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் அரசியல் காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டேன் என்று திருமாவளவன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரா்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
    • 80 வீரா்கள் அடங்கிய கமாண்டோ வீரா்களும் 24 மணி நேரமும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

    கனமழை பெய்து பேரிடா் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் மீட்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 203 இடங்களையும் தீயணைப்புத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

    வெள்ளத்திலும், தாழ்வான பகுதிகளிலும் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு தீயணைப்புத்துறை முழு அளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்கியிருக்கும் நபா்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள், மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்புப்பணிக்கான கயிறுகள், லைப் பாய், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார்

    புயல் காற்றால் சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 9 ஹைட்ராலிக் மரம் அறுக்கும் எந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மரம் அறுக்கும் எந்திரங்கள் 262 சாதாரண மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரா்கள் கொண்ட குழு மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழுவினா் என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிர் கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

    கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா் மற்றும் தொ்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட நவீன கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் மீட்பு பணிக்கு 1,360 தீயணைப்பு வீரர்கள் தயார்

    வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தகவல் தொடா்பு சாதனங்களான வாக்கி டாக்கி போன்றவை தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரா்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இங்கு வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 40 படகுகள்,40 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல 80 வீரா்கள் அடங்கிய கமாண்டோ வீரா்களும் 24 மணி நேரமும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

    • காற்று பலமாக வீசுவதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
    • வேளச்சேரியில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி வெள்ளச்சேரி போல் காட்சியளித்தது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.

    இதனால் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

    காற்று பலமாக வீசுவதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கின.

    திருநின்றவூர்-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையத்தடுப்பு சுவர் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    பட்டாபிராம் மெயின் ரோடு, தென்றல்நகர், ஆவடி வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சரஸ்வதி நகர், பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் பெருமளவு வெள்ளம் தேங்கியது.

    மணலி விரைவு சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கனரக வாகனங்கள் கூட செல்ல முடியாதபடி தத்தளித்தன. எம்.ஜி.ஆர். நகரில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கார்கில் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கி உள்ளது.

    ராயபுரம் மாதா சர்ச் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் ஒரு அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், ராயபுரம், ஆட்டு தொட்டி, மின்ட் தெரு, வால்டாக்ஸ் ரோடு ஆகிய இடங்களில் சாலைகள் அனைத்தும் ஆறுகள் போல் காட்சி அளிக்கின்றன.

    கொடுங்கையூர் தென்றல் நகர் ஒன்று முதல் 5-வது தெரு வரை மக்கள் வெளியே செல்ல முடியாத படி தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பூந்தமல்லி சாலை ரித்தர்டன் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கோயம்பேடு மெட்ரோ பாலம் வழியாக மார்கெட்டுக்கு செல்லும் பாதையில் பெருமளவு தண்ணீர் தேங்கியது.

    அய்யப்பன்தாங்கல் முதல் காட்டுப்பாக்கம் வரை மெயின் ரோட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேப்பாக்கம் வாலாஜா சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வேளச்சேரியில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி வெள்ளச்சேரி போல் காட்சியளித்தது. தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகனங்கள செல்ல முடியவில்லை.

    ஏராளமான மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றினாலும் கொட்டிய மழைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பல இடங்களில் வெளியேற்றப்படும் தண்ணீரை சாலைகளில் விட்டதால் மீண்டும் பெருக்கெடுத்தது.

    பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சேடியது. பலத்த காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    • சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
    • புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும்.

    ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும். குறிப்பாக புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று நடைபெறாமல் நாளை கரையை கடக்கும்" என கூறியுள்ளார்.

    ×