என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார்.
    • எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.

    அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த 11-ந் தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நிறைவு செய்தார்.

    ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை மறுசீரமைக்க வேண்டும், அரசு பணி தேர்வு தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.

    நடைபயணத்தின் இறுதி நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    நான் எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது.

    எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என்றார்.

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
    • நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.

    அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர் ரெயில்நிலையம் மறுஉருவாக்கத்திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் என ரூ.5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான விழா நேற்று நடந்தது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு. முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலையில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் சாடினார். அவர் கூறியதாவது:-

    நாட்டில் உள்ள சிலர் (காங்கிரசார்) சிதைக்கப்பட்ட சித்தாந்தத்துக்கு இரையாகி விட்டனர். அவர்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். அவர்கள் நாட்டில் நடக்கிற எந்த நல்லதையும் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறார்கள்.

    எல்லாவற்றையும் ஓட்டு அடிப்படையில் பார்ப்பவர்களால், நாட்டை மனதில் கொண்டு திட்டங்களைத் தீட்ட முடியாது. இந்த சிந்தனை காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுககு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

    நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது. நவீன கட்டமைப்பு வசதிகளை அடிப்படை அமைப்புடன் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

    தேவையான அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளை ஏற்கனவே தொடங்கியாகி விட்டது என்றால், டாக்டர்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. எல்லா வீடுகளிலும் ஏற்கனவே தண்ணீர் கிடைக்கத் தொடங்கி இருந்தால், ஜல்ஜீவன் திட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

    தொலைநோக்குத்திட்டத்துடன் ராஜஸ்தானிலும் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    நவீன கட்டமைப்பு வசதிகள் நகரங்கள், கிராமங்களை இணைப்பதை அதிகரிக்கும். வசதிகளை ஏற்படுத்தும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். வளர்ச்சியை முடுக்கி விடும். வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண வேண்டும் என்று நாம் பேசுகிறபோது, இந்த நவீன கட்டமைப்பு வசதி, புதிய சக்தியாக உருவாகும்.

    நாட்டில் எல்லா வகையிலான உள்கட்டமைப்புகளிலும் இதுவரையில்லாத வகையில் பெரும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதிவேகமாக பணிகள் நடைபெறுகின்றன.

    உள்கட்டமைப்புகளுக்காக முதலீடுகள் செய்கிறபோது, அது வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் நன்மைகள் மக்களுக்குப் போய்ச்சேருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை.
    • எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப்பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத்தினர், சாதியினர் இடையேயும் அன்பும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த திசையில் நீங்களும் (பிரதமர் மோடி) செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது மட்டும் நடந்து விட்டால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத்துடன் பணியாற்ற முடியும்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.

    நாம் அனைவரும் ஒற்றுமையாய் நடைபோட்டால், நாடு ஒன்றாக இருக்கும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    பதற்றமும், வன்முறையும் வளர்ச்சியைத் தடுத்துவிடும். நீங்கள் (பிரதமர் மோடி) விடுக்கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச்செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேசிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விழாவில் அசோக் கெலாட் பேச எழுந்தபோது, கூட்டத்தினர் எழுந்து "மோடி மோடி" என கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி கூட்டத்தினரைப் பார்த்து " நீங்கள் உட்காருங்கள், அப்போதுதான் அசோக் கெலாட் இடையூறின்றி பேச முடியும்" என குறிப்பால் உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
    • அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

    இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    சூரத்கார்:

    ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வான் வெளியில் தாறுமாறாக பறந்தது. உடனே அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். உடனே அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.

    இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமானம் விழுந்ததில் அந்த வீடு முற்றிலும் தேசம் ஆனது. பாராசூட்டில் குதித்ததால் விமானி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். விபத்து குறித்து கேள்வி பட்டதும் போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    விமானத்தின் சிதறிய பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் என்ன வென்று தெரிய வில்லை. விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    • ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்.
    • அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர் மூத்த தலைவர்களின் சமரச பேச்சு காரணமாக பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதுபற்றி தற்போது ஜோத்பூரில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசியபோது, 2020-ம் ஆண்டு தனது ஆட்சியை கவிழ்க்க உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் சதி செய்தனர். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.

    ஆனால் அப்போது எனது ஆட்சி காப்பாற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வசுந்துரா ராஜே சிந்தியா மற்றும் முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா ஆகியோரே காரணம், எனது ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை யாரும் திரும்ப வாங்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, என்று கூறியிருந்தார்.

    முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியதை வசுந்துரா ராஜே சிந்தியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை சமாளிக்க அவர் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறிவருகிறார்.

    அவரது ஆட்சியை காப்பாற்ற நான் உதவி செய்ததாக அவர் பொய் கூறுகிறார். ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே, எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கியதாக கூறியுள்ளார். அவரிடம் தான் உள்துறை இலாகா உள்ளது. அவர் உடனே அந்த எம்.எல்.ஏ. க்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜஸ்தானில் நடந்த குதிரை பேரத்திற்கு பின்னணியில் அசோக் கெலாட்டே இருந்தார். அவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டார். ஆனால் பாரதிய ஜனதா ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுப ட்டதில்லை, இனியும் ஈடுபட போவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது. இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்கள், ஹெயின்ரிச் கிளாசன் 26 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 25 ரன்களும், அப்துல் சமாத் 11 ரன்களும் எய்டன் மார்க்ரம் 6 ரன்களும், மார்கோ ஜான்சன் 3 ரன்களும எடுத்தனர்.

    அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 214 ரன்களை குவித்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது.

    இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 13.5 ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சகா, ஷுப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் 36 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். சகா 41 ரன்னும், பாண்ட்யா 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சிக்கித் திணறியது.

    கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளை.
    • போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், மற்றவர் முகத்தை மப்ளரால் மூடியிருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது.
    • 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து அடையாளம் தெரியாத 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இதைப்பார்த்த இந்திய வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இதனால் 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    அவர்களை பற்றிய விவரங்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருகின்றனர்.

    ×