search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்து விட்டு தற்போது இலவசமா?: கெலாட் மீது ரதோர் சாடல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்து விட்டு தற்போது இலவசமா?: கெலாட் மீது ரதோர் சாடல்

    • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
    • சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்பா? என எதிர்க்கட்சி விமர்சனம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதனால் மக்கள் மனதை கவரும் வகையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை நழுவ விட்ட பா.ஜனதா, கெலாட்- சச்சின் பைலட் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கையில் எடுத்து ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் அசோக் கெலாட் அறிவிப்பு பா.ஜனதாவை சற்று அச்சம் அடைய செய்துள்ளது.

    இதற்கிடையே, நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளை அடித்துவிட்டு, ஆட்சியின் கடைசி காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதா? என சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராஜேந்திர ரதோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜேந்திர ரதோர் கூறியதாவது:-

    மோடியின் மாநாடுகளை பார்த்து அசோக் கெலாட் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால்தான் நேற்றிரவு வலுக்கட்டாயமாக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளையடித்துவிட்டு, தற்போது தேர்தலை அணுகுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் திடீரென உங்களுடைய அறிவிப்புகளை மக்கள் நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. உங்களுடைய கொள்கை மற்றும் நோக்கம் குறைபாடானது.

    இவ்வாறு ரதோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×