என் மலர்
ராஜஸ்தான்
- 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல்
- நேற்று கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.
கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும் கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
- இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
- தேர்தலை முன்னிட்டு, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
இந்நிலையில், மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில், முதல்வர் அசோக் கெலாட்டை எதிர்த்து சர்தார்புரா தொகுதியில் மகேந்திர சிங் ரத்தோர் போட்டியிடுகிறார்.
அசோக் கெலாட்டின் முன்னாள் துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டை எதிர்த்து பாஜக தலைவர் அஜித் சிங் மேத்தா டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது. இதுவரை, ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 182 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
- ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
- அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-
நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.
ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.
நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த வாரம் சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
- தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், அசோக் கெலாட்டிற்கு இது சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவிற்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் அமலாகத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் தினேஷ் கோதானியா மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியதுடன், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனை அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே FEMA வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
#WATCH | Enforcement Directorate conducts raid at the Jaipur residence of Rajasthan Congress chief Govind Singh Dotasra pic.twitter.com/kBmfhYXTrs
— ANI (@ANI) October 26, 2023
- ராஜஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- காங்கிரஸ் இங்கு மீண்டும் வென்றால் கியாஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார்.
முதல் மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசுகையில், கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும். 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
- ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார்.
- சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) ஆட்சியில் இருந்தபோது, ராஜஸ்தானில் எத்தனை திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்? மோடி மற்றும் பா.ஜ.க.வின் கவனம் உங்கள்(மக்கள்) நலனில் அல்ல, மாறாக ஆட்சியில் நீடிப்பதிலும், தங்களை பலப்படுத்திக் கொள்வதிலும்தான் உள்ளது.
ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பெரும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பது அவர்களின் கொள்கையாகிவிட்டது.
ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார். கடந்த காலத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசமாட்டார்.
சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும். வளர்ச்சியை பற்றி பேசாமல் மதம், சாதி பிரச்சினைகளை ஏன் பா.ஜ.க. முன்வைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெங்காலி கைவினை கலைஞர்கள் சுமார் 3 மாதமாக சிலையை வடிவமைத்துள்ளனர்.
- பிரமிக்க வைக்கும் சிலை 9.5 நீளமும், 4.5 அடி அகலமும் கொண்டது.
வடமாநிலங்களில் துர்கா பூஜை விழா கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையையொட்டி பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் துர்கா சிலைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்காலி கைவினை கலைஞர்கள் சுமார் 3 மாதமாக இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். பிரமிக்க வைக்கும் இந்த சிலை 9.5 நீளமும், 4.5 அடி அகலமும் கொண்டது. சுரு மாவட்டத்தில் சக்சன் பவனில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை மாதுர்கா சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பதை காட்டுகிறது. இந்த சிலை உருவான பின்னணியில் மூலையாக செயல்பட்ட வியாஸ் என்பவர் சிலையை அலங்கரிக்கும் வைரங்களை தேர்ந்தெடுப்பதற்காக அமெரிக்கா சென்று வாங்கி வந்துள்ளார்.
- நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன்.
- பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். இந்த பொருட்களை தவிர தாடியை நல்ல நிலையில் வைத்திருக்க தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்.
பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன். இந்த போட்டிகள் நீண்ட தாடியை பராமரிக்கும் எனது ஆர்வத்திற்கு ஊக்கத்தை அளித்தது. நான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல பஸ் மூலம் தினமும் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். எனது பணி இடத்திற்கு செல்லும் போது தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறேன் என்றார்.
- குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.
- ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்கள் சண்டை போட்டு வருகின்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்குள் உள்ள இரு ஆளும் கட்சிகளுக்கு இடையே காவிரி பிரச்சனைக்காக மோதி வருகிறார்கள் . குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தை கடந்த 5ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டது. குற்றங்கள் இங்கு அதிகமாக நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. இதற்காகவா நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டீர்கள். ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் இதை கண்டு கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
- பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்பட்டது, பா.ஜ.க. ஏன் இதில் இத்தனை அவசரம் காட்டியது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவே இல்லை. பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இந்தியா vs பாரத் பற்றிய விவாதத்திற்கு தான் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், மக்கள் இதை கண்டுக்கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். மேலும் சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தனர்."
"நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்தோம். பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முறையாக எல்லைகளை கட்டமைத்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. உண்மையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமலுக்கு கொண்டுவர முடியும்."
"ஆனால், பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகளுக்கு தாமதப்படுத்த நினைக்கிறது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெறக் கூடாது என்றும் பா.ஜ.க. நினைக்கிறது," என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.






