search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி ஒரு அபசகுனம் பிடித்தவர்..- ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்
    X

    "மோடி ஒரு அபசகுனம் பிடித்தவர்.."- ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார்.
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்.

    மத்திய பிரதசேம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த நிலையில், வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரசாரங்கள் மூலம் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாததற்கு பிரதமர் மோடி நேரில் சென்றதே காரணம் என்று சூசகமாக கூறினார்.

    பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கூறுகையில்,"உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது.

    அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லிம் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அவர் அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்" என்று குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ராகுல் காந்தியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாகஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் ரவிங்கர் பிரசாத் கூறுகையில்," ராகுல் காந்தி உங்களுக்கு என்ன ஆயிற்று? தோல்வியின் விரக்தியின் காரணமாக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நாட்டின் பிரதமருக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

    நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விளையாட்டில் தோல்வியும் வெற்றியும் இருக்க தான் செய்யும். ராகுல் காந்தி பேசியது கண்டனத்திற்குரியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    Next Story
    ×