search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajastan Assembly Election"

    • உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம் அளிக்கப்படும்.
    • 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கம் என மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:

    ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.

    பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் புகார்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் ரோமியோ எதிர்ப்புப் படை அமைக்கப்படும்.

    பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    ×