என் மலர்
புதுச்சேரி
- நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு லோக்சபா தேர்தலின்போது நாங்கள் வெற்றிப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்தது. ஆனால் தர வில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்- ரூ 65, டீசல்- ரூ 55 , கியாஸ் சிலிண்டர் ரூ 450 மானியத்துடன் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல் சமையல் எரிவாயு விலை அனைத்தும் எகிறிவிட்டது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மறைப்பதற்காக ஜி-20 மாநாட்டினை நடத்தி 4 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வீணடித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்தும் உள்ளார். சிறுபான்மை, தலித் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
புதுச்சேரியை ஊழல் இல்லாத பெஸ்ட் மாநிலமாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். ஆனால் புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.
மது கடைகளை திறந்து விட்டதால், மக்களுக்கு அமைதி இல்லை. கல்வி தரம் குறைந்து விட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வருகிற லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
- வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதி யான நேருநகர் அன்னை தெரசா நகரைச்சேர்ந்தவர் நெல்சன்-ஜெயமேரி. இவர்களுக்கு ஸ்டாலின் அஜய் (வயது28), அபினேஷ் ராஜ் (26). ஆகிய மகன்கள் இருந்தனர். ஸ்டாலின் அஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு ஸ்டாலின் அஜய் சென்று வருவது வழக்கம். ஸ்டாலின் அஜய் சித்தி வீட்டில் இருக்கும் போது, வீட்டு அறையை உள்பக்க மாக மூடிகொண்டு இருப்பது வழக்கமாம்.
இந்நிலையில், ஸ்டாலின் அஜய் வேலைக்கு போகா மல், வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார். மாலை வரை ஸ்டாலின் அஜய் வெளியே வராததால், சித்தி மற்றும் பெற்றோர் சந்தேகம் அடைந்து, கதவை தட்டினர். திறக்காததால், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஸ்டாலின் அஜய் புடவையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, அபினேஷ் ராஜ் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
- மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் உள்ள வெட்டவெளியில் மது பாட்டில்களை வாங்கி வந்து தினமும் பலர் கூட்டம் கூட்டமாக மது அருந்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் மது குடிப்பதால் மது அருந்துபவர்களுக்குள் அடிக்கடி மோதல் மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மாந்தோப்பு சுந்தர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கு மது அருந்துபவர்களை புதுவை மற்றும் தமிழக போலீசார் விரட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஆரோவில் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு மணிமாறன், மற்றொரு போலீஸ்காரர் தங்கமணி ஆகிய இருவரும் சாதாரண உடையில் புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.
மேலும் நான் யார் என்று தெரியுமா என கூறி ஏட்டு மணிமாறனின் செல்போனை பறித்தார். உடனே மணிமாறன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.
இதற்கிடையில் மது அருந்திய நபர் ஏட்டு மணிமாறனை சரமாரியாக தாக்கினார். மேட்டுப்பாளையம் போலீசார் வந்தவுடன் அங்கு மது அருந்திய 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி ஆரோவில் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் தலைமை காவலர் மணிமாறனை தாக்கியது காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணியாற்றும் முனுசாமி என்பதும் மற்றொருவர் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படைவீரராக பணியாற்றும் வசந்த் என்பதும் இவர்களுடன் மது அருந்திய மற்றொருவர் பெட்ரோல் பங்க் ஊழியர் பார்த்திபன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கியதில் முதுகு பக்கத்தில் உள் காயம் ஏற்பட்ட ஏட்டு மணிமாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் ஏட்டு மணிமாறனை ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
- இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
- மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன.
2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் இருந்து இந்த பகுதியை மாங்குரோவ் காடுகள் காப்பாற்றியது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து முருங்கப்பாக்கம் ஆற்று பகுதியில் கூடுதலாக மாங்குரோவ் காடுகளை வளர்ந்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான 216 ஏக்கர் பரப்பளவில் மிக சிறப்பாக வளர்ந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் பறவைகளின் புகலிடமாக இருப்பதுடன் நகர பகுதியில் இருந்து நீர் வழியே வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலுக்குள் செல்லாமல் தடுத்து வருகிறது.
முருங்கம்பாக்கம் ஆற்றில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்வழிப்பாதையில் எழில் கொஞ்சும் பசுமையான மரங்கள் என இயற்கையாய் இங்கு சுற்றுலா மையம் உருவாகியுள்ளது.
இந்த இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஆனால் இந்த இயற்கை அரணுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மண்புழு எடுக்கும் கும்பல் ஒரு மாதத்திற்கு 2 ஏக்கர் என மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.இந்த காடுகளை காக்க போராடி வரும் பியூச்சர் இண்டியா டிரஸ்ட் பொறுப்பாளர் ராஜமனோகர் தலைமையில் 5 பேர் தங்களது கோரிக்கையை நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட இடத்திலேயே மாங்குரோவ் காடுகளை மீட்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்து மிக பிரமாண்ட வகையில் பிரதமர் மோடி பெயர் மற்றும் தேசிய கொடியை அமைத்துள்ளனர்
மாங்குரோவ் காடுகளை மீட்டு அதற்கு பிரதமரின் பிறந்த நாளையொட்டி பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்காக 190அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்ட பிரதமரின் பெயரை 5 நபர்கள் இணைந்து 11 நாட்களாக உருவாக்கியுள்ளனர்.
- தனது டிராக்டரை விவசாயப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது.
- இது குறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தாமனாங்குடி மாதாகோவில் வீதியை ச்சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது61). விவசாயி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது டிராக்டரை விவசாய ப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் (25) என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது. இதில், லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து லாரன்ஸ் கேட்டபோது, சேதமான சுவரை சரி செய்து கொடுத்துவிடுவதாக அடைக்கலசாமி கூறினார்.
இந்நிலையில், மதியம் வீட்டில் அடைக்க லசாமி தனியாக இருந்தபோது, லாரன்ஸ் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து, அடைக்கல சாமியை ஆபாச மாக திட்டி, கையில் வைத்தி ருந்த மரக்க ட்டையால் தாக்கி னார். இதில் காயம் அடைந்த அடைக்க லசாமி, திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவரு கின்றனர்.
- ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் டெங்குவிற்கு இருவர் பலியானதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நல வழித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் கூறியதாவது;-
காரைக்கால் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 80 நபர்களுக்கு டெங்கு கண்டறிய ப்பட்டுள்ளது. இதில் சுமார் 32 நபர்கள் அண்டை மாநி லங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 நபர்கள். இந்த மாதம் இன்றுவரை 6 நபர்கள் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் 4 நபர்கள் என்று மொத்தம் 10 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் குணமாக்கி விடலாம். காலம் கடத்துவதும் சுயமாக மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். கொசு ஒழிப்பு பணியிலும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
- அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
பாகூர்:
புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுவையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் துப்புரவளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார்.
இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (12) 2 மகன்கள். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான்.
இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ பையர் எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவும் கமலேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று காலை செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சை வள்ளியிடம் பணம் கேட்டான். அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருவதாக கமலேஷிடம் கூறிவிட்டு பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்டார்.
விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத வேதனையில் இருந்த கமலேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பச்சைவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பச்சைவள்ளி பதறி அடித்து கொண்டு வீட்டு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் பருவமழை தொடங்கும் முன்பே புதுவையில் டெங்கு, மலேரியா வேகமாக பரவி வருகிறது.
புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம் ஆகும். எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதுடன் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் புதுவை தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28), குருமாம் பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
- காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
காரைக்கால்:
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் தீபிகா (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த கவுதம் (22). டிப்ளமோ படித்துள்ள இவர் அம்பத்தூரில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார். அப்போது, தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.
இவர்களது காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலன் கவுதமுடன் காரைக்காலில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து தமிழக பகுதியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் சென்னை அம்பத்தூர் போலீசில் பெற்றோர் தரப்பில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் நேற்று மாணவியை தேடி காரைக்கால் சென்றனர்.
இதையறிந்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீசாரை கோர்ட்டு வக்கீல்கள் தடுத்தனர்.
அப்போது திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடியினர் காட்டினர். மாணவியின் பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினர்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோர்ட்டு வாசலில் வைத்து தனது உறவினர்களிடம் நகைகளை தீபிகா கழற்றி கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றார். இச்சம்பவம் காரைக்கால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
- தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் முல்லை நகர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (வயது 28). பெயிண்டர் வேலை செய்கிறார். இவர் அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்த தாக கூறப்படுகிறது. அந்த ப்பெண் மைனர் என்பதால், பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் தந்தை, அவரது உறவினர்கள் அரவிந்த்ராஜை பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த் ராஜ் தனது நண்பர் நந்தகோபால் மற்றும் சிலருடன் அங்குள்ள சுடுகாடு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மேற்கண்ட 4 பேர், அரவிந்த்ராஜ்ஜை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்துள்ளனர். தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.
அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அரவிந்த்ராஜை விரட்டி சென்று அடித்த பொழுது, அவரது தாய் மீனா தடுத்த பொழுது அவரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அரவிந்த் ராஜ், அவரது தாய் ஆகியோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தல்.
- நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 5ஆக உயர்ந்துள்ளது.
இதனால், கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் எதிரொலியால், கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாஹேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
மேலும், புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாஹேயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
- மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






