என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.
    • வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறமுகம். அவரது மனைவி அமுதா (வயது 53). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு வலது கால் முட்டியின் பின்புறம் நீர்க்கட்டி ஏற்பட்டது.

    இதனை சரி செய்ய இவர், புதுவை புஸ்சி வீதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

    தொடர்ந்து அவரை கடந்த 6-9-2006 அன்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து நீர்க்கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது வலது கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அமுதா 2007-ம் ஆண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    தனியார் டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடு காரணமாக தனக்கு பல்வேறு கஷ்டங்கள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தவழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைபாடு உள்ளதாக கருதி அமுதாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு 50 ஆயிரமும், மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பின் நகலை பெற்ற 45 நாட்களுக்குள் அமுதாவுக்கு நஷ்டஈடு வழங்கா விட்டால் தீர்ப்பு தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.

    இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

    9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,

    காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.

    ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    • சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

    புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார். சட்டசபை கூடும் நாளை அவர் உண்ணாவிரதம் இருப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை, அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டமன்றம் கூடுகிறது.

    • போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
    • நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலையில் உள்ள மளிகை கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து போலீசார், குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட ரூ.11 ஆயிரத்து 640 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர், நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை (வயது42) போலீசார் கைது செய்தனர்.

    • காரைக்காலில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம், சிலர் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சீட்டு ஆடிய 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தபோது, 3 பேரிடம் ரூ.2,500 பணம், சீட்டு கட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்காலில் போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், குறிப்பிட்ட கடையில், சில சாட்சிகள் முன்னிலையில் சோதனை செய்தபோது, ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச்சேர்ந்த முகம்மது சகாபுதினை போலீசார் கைது செய்தனர்.

    • மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது.
    • காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் தேவாநகரை சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50).

    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களான இவர்களுக்கு விக்னேஷ்வரி (29), காவ்யா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவ்யா பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

    இதில் மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக காவ்யா புதுவைக்கு வந்திருந்தார். தொடர்ந்து பெற்றோருடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் காவ்யா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் காவ்யாவை அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரான்ஸ் மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு லோக்சபா தேர்தலின்போது நாங்கள் வெற்றிப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்தது. ஆனால் தர வில்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்- ரூ 65, டீசல்- ரூ 55 , கியாஸ் சிலிண்டர் ரூ 450 மானியத்துடன் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல் சமையல் எரிவாயு விலை அனைத்தும் எகிறிவிட்டது.

    நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மறைப்பதற்காக ஜி-20 மாநாட்டினை நடத்தி 4 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வீணடித்துள்ளார்.

    நூற்றுக்கணக்கான அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்தும் உள்ளார். சிறுபான்மை, தலித் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    புதுச்சேரியை ஊழல் இல்லாத பெஸ்ட் மாநிலமாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். ஆனால் புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.

    மது கடைகளை திறந்து விட்டதால், மக்களுக்கு அமைதி இல்லை. கல்வி தரம் குறைந்து விட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வருகிற லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
    • வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதி யான நேருநகர் அன்னை தெரசா நகரைச்சேர்ந்தவர் நெல்சன்-ஜெயமேரி. இவர்களுக்கு ஸ்டாலின் அஜய் (வயது28), அபினேஷ் ராஜ் (26). ஆகிய மகன்கள் இருந்தனர். ஸ்டாலின் அஜய் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தி போலீஸ் ஏட்டு செல்வி என்பவர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு ஸ்டாலின் அஜய் சென்று வருவது வழக்கம். ஸ்டாலின் அஜய் சித்தி வீட்டில் இருக்கும் போது, வீட்டு அறையை உள்பக்க மாக மூடிகொண்டு இருப்பது வழக்கமாம்.

    இந்நிலையில், ஸ்டாலின் அஜய் வேலைக்கு போகா மல், வீட்டு அறையில் உள் தாள்ப்பால் போட்டு கொண்டு இருந்தார். மாலை வரை ஸ்டாலின் அஜய் வெளியே வராததால், சித்தி மற்றும் பெற்றோர் சந்தேகம் அடைந்து, கதவை தட்டினர். திறக்காததால், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஸ்டாலின் அஜய் புடவையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, அபினேஷ் ராஜ் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    • மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் உள்ள வெட்டவெளியில் மது பாட்டில்களை வாங்கி வந்து தினமும் பலர் கூட்டம் கூட்டமாக மது அருந்தி வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் மது குடிப்பதால் மது அருந்துபவர்களுக்குள் அடிக்கடி மோதல் மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மாந்தோப்பு சுந்தர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கு மது அருந்துபவர்களை புதுவை மற்றும் தமிழக போலீசார் விரட்டி விடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஆரோவில் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு மணிமாறன், மற்றொரு போலீஸ்காரர் தங்கமணி ஆகிய இருவரும் சாதாரண உடையில் புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கூட்டமாக மது அருந்தியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    ஆனால் மது அருந்திய நபரில் ஒருவர் போலீஸ் ஏட்டு மணிமாறனை தகாத வார்த்தையால் திட்டினார்.

    மேலும் நான் யார் என்று தெரியுமா என கூறி ஏட்டு மணிமாறனின் செல்போனை பறித்தார். உடனே மணிமாறன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.

    இதற்கிடையில் மது அருந்திய நபர் ஏட்டு மணிமாறனை சரமாரியாக தாக்கினார். மேட்டுப்பாளையம் போலீசார் வந்தவுடன் அங்கு மது அருந்திய 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி ஆரோவில் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் தலைமை காவலர் மணிமாறனை தாக்கியது காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை வீரராக பணியாற்றும் முனுசாமி என்பதும் மற்றொருவர் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படைவீரராக பணியாற்றும் வசந்த் என்பதும் இவர்களுடன் மது அருந்திய மற்றொருவர் பெட்ரோல் பங்க் ஊழியர் பார்த்திபன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கியதில் முதுகு பக்கத்தில் உள் காயம் ஏற்பட்ட ஏட்டு மணிமாறன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் ஏட்டு மணிமாறனை ஊர்க்காவல் படை வீரர் முனுசாமி தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

    • இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
    • மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன.

    2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் இருந்து இந்த பகுதியை மாங்குரோவ் காடுகள் காப்பாற்றியது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து முருங்கப்பாக்கம் ஆற்று பகுதியில் கூடுதலாக மாங்குரோவ் காடுகளை வளர்ந்து வருகின்றனர்.

    அரசுக்கு சொந்தமான 216 ஏக்கர் பரப்பளவில் மிக சிறப்பாக வளர்ந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் பறவைகளின் புகலிடமாக இருப்பதுடன் நகர பகுதியில் இருந்து நீர் வழியே வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலுக்குள் செல்லாமல் தடுத்து வருகிறது.

    முருங்கம்பாக்கம் ஆற்றில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்வழிப்பாதையில் எழில் கொஞ்சும் பசுமையான மரங்கள் என இயற்கையாய் இங்கு சுற்றுலா மையம் உருவாகியுள்ளது.

    இந்த இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

    ஆனால் இந்த இயற்கை அரணுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மண்புழு எடுக்கும் கும்பல் ஒரு மாதத்திற்கு 2 ஏக்கர் என மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.

    இவற்றை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.இந்த காடுகளை காக்க போராடி வரும் பியூச்சர் இண்டியா டிரஸ்ட் பொறுப்பாளர் ராஜமனோகர் தலைமையில் 5 பேர் தங்களது கோரிக்கையை நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.

    மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட இடத்திலேயே மாங்குரோவ் காடுகளை மீட்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்து மிக பிரமாண்ட வகையில் பிரதமர் மோடி பெயர் மற்றும் தேசிய கொடியை அமைத்துள்ளனர்

    மாங்குரோவ் காடுகளை மீட்டு அதற்கு பிரதமரின் பிறந்த நாளையொட்டி பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    அதற்காக 190அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்ட பிரதமரின் பெயரை 5 நபர்கள் இணைந்து 11 நாட்களாக உருவாக்கியுள்ளனர்.

    • தனது டிராக்டரை விவசாயப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது.
    • இது குறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தாமனாங்குடி மாதாகோவில் வீதியை ச்சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது61). விவசாயி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது டிராக்டரை விவசாய ப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் (25) என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது. இதில், லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து லாரன்ஸ் கேட்டபோது, சேதமான சுவரை சரி செய்து கொடுத்துவிடுவதாக அடைக்கலசாமி கூறினார்.

    இந்நிலையில், மதியம் வீட்டில் அடைக்க லசாமி தனியாக இருந்தபோது, லாரன்ஸ் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து, அடைக்கல சாமியை ஆபாச மாக திட்டி, கையில் வைத்தி ருந்த மரக்க ட்டையால் தாக்கி னார். இதில் காயம் அடைந்த அடைக்க லசாமி, திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவரு கின்றனர்.

    ×