என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில்  மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    • காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க அமைப்பா ளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×