search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்க சந்திர பிரியங்கா எதிர்ப்பு
    X

    திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்க சந்திர பிரியங்கா எதிர்ப்பு

    • திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்.
    • காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டார்.

    அந்த கடிதத்தில், மறைமுகமாக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.

    அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    மேலும், மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிராலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்காலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் சமூகங்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

    ஏனெனில் திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×